பொறியியல் படிப்புக்கும் விரைவில் ‘நீட்’ தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2018

பொறியியல் படிப்புக்கும் விரைவில் ‘நீட்’ தேர்வு

செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலை யில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் வேந்தர் ரெமிபாய் ஜேப்பியார், நிகர்நிலை பல்கலை. தலைவர் மேரி ஜான்சன், இணைவேந்தர் மரியஜீனா ஜான்சன், இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் பூனியா, திருவனந்தபுரம் வி.எஸ்.எஸ்.சி. இயக்குநர் சோமநாத், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் திரிலோச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

இந்த விழாவில் வி.எஸ்.எஸ்.சி. இயக்குநர் சோமநாத் மற்றும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் திரிலோச்சன் ஆகியோருக்கு பல்கலை. சார்பாக கவுரவ டாக்டர்பட்டம் வழங்கப்பட்டது.சுமார் 2470 மாணவர்களுக்கு இளநிலை பட்டமும், 86 மாணவர் களுக்கு பல் மருத்துவ பட்டமும், 85 மாணவர்களுக்கு ஆராய்ச்சி முனைவர் பட்டமும் வழங்கப்பட் டது. மேலும், ஒவ்வொரு துறை யிலும் சிறந்து விளங்கிய 29 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தி யாளர்களை சந்தித்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் பூனியா கூறும் போது, “மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ தகுதித் தேர்வு நடைபெறுவது போல், பொறியியல் படிப்புக்கும் ‘நீட்’ தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வானது வருகின்ற கல்வியாண் டில், அதாவது 2019 -ம் ஆண்டு முதல் நடத்த திட்டமிடப்பட் டுள்ளது” என்று தெரிவித்தார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி