PGTRB - காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2018

PGTRB - காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்!

தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையானபாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள்மற்றும் மின்னணு மதிப்பீடு மையங்கள்) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தின் திறப்பு விழா நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மையத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.பள்ளிக்கூடங்களில் அமல்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டங்களில் ‘கியூ ஆர்’ கோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த ‘கியூ ஆர்’ கோடுவை செல்போனில் ‘ஸ்கேன்’ செய்தால், இணையதளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ தெரியும். அதாவது உதாரணமாக 6–ம் வகுப்பு தமிழ் பாடத்தில் கும்மி அடி என்று தலைப்பில் உள்ள பாடத்தில் ‘கியூ ஆர்’ கோடு இருந்து, அதை ‘ஸ்கேன்’ செய்தால், கும்மி அடிப்பது மற்றும் சத்தம் ஆகியவை வீடியோ மற்றும் ஆடியோவாக தெரியும். அதை மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிப்பார். இப்படி அனைத்து பாடப்புத்தகங்களிலும் ஒவ்வொரு பாடத்திற்கும் ‘கியூ ஆர்’ கோடு இடம் பெற்றுள்ளது. இவற்றை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார்.இதையடுத்து முதன்மை கல்வியாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பயிற்சியின் நிறைவு விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இணை இயக்குனர், இயக்குனர் மூலம் எதையும் தீர்க்க நாட்கள் அதிகமாகும். அதனால் தான் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும். நான் 8 முறை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன். அதற்கு காரணம், யார் எதை கூறினாலும் அதை காது கொடுத்து கேட்பேன். அவர்களை தட்டிக்கொடுப்பேன். அதேபோல நீங்களும் செயல்படுங்கள்.உங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளை பார்வையிட்டு அந்த பள்ளிகளில் கழிப்பறை மற்றும் ஏதாவது குறை இருந்தால்தெரியப்படுத்துங்கள். பள்ளிகளுக்கு அனைத்து கட்டமைப்புகளும் செய்து கொடுக்கப்படும். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் சேவை மனப்பான்மை உள்ளவர்களை சேருங்கள். சிறப்பாக பணியாற்றுங்கள். பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 வகுப்புகளுக்கு இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பிளஸ்–2 படித்து முடித்த உடன் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் அனைத்து பாடங்களும் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவர் புதுமை பள்ளி விருதுகளையும், கனவு ஆசிரியர் விருதுகளையும் ஆசிரியர்களுக்கு வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு எப்படி பாடம்நடத்துவது என்பது குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு.ஆனால் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுவதால் தமிழகத்தில் 412 மையங்களில் நீட் பயிற்சி நடத்தப்படும். அந்த பயிற்சி விடுமுறை நாட்களிலும், பள்ளிக்கூட வேலைநேரம் போக மற்ற நேரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக விழாவின் போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன், பள்ளி கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர் எஸ்.கருப்பசாமி, மெட்ரிகுலே‌ஷன் பள்ளிகள் இயக்குனர்ச.கண்ணப்பன், இணை இயக்குனர் நாகராஜ முருகன் மற்றும் தீக்ஷா மற்றும் மின்னணு மதிப்பீடு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.எம்.சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

75 comments:

  1. Good. Enlighten PG TRB English coaching center edappadi, Salem.polytechnic TRB English study materials and AEEO Exam English study materials available. contact: 9688539099

    ReplyDelete
  2. Good news ,waiting pg's prepare well

    ReplyDelete
  3. Chemistry materials kidaikkuma,

    ReplyDelete
  4. Avar sonnathellam senjutara Ine Ithu than balance

    ReplyDelete
    Replies
    1. Super nenga correct ah solringa avarudaiya seyalai.

      Delete
    2. அவர் சொல்ற எல்லாம் வரிசையா செஞ்சுட்டுதான் வர்றார்... என்ன கொஞ்சம் லேட் ஆகுது அவ்ளோதான்.

      Delete
  5. Avar sonnathellam senjutara Ine Ithu than balance

    ReplyDelete
  6. Intha government inum 3 months irukum bro

    ReplyDelete
  7. Intha government inum 3 months irukum bro

    ReplyDelete
  8. PG-TRB (TAMIL)
    DHARMAPURI KANCHII ACADEMY
    1)CLASS coaching Available
    2) Material Available
    3)Test Batch Available
    www.kanchiacademy.com
    9944695944

    ReplyDelete
  9. PG-TRB (TAMIL)
    DHARMAPURI KANCHII ACADEMY
    1)CLASS coaching Available
    2) Material Available
    3)Test Batch Available
    www.kanchiacademy.com
    9944695944

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. உங்கள் அறிவிப்புகள் பெயரளவிலேயே உள்ளன. ஆசிரியர் தேர்வுவாரிய அட்டவனைப்படி அறிவிப்புகள் வெளியாகவில்லை. சொல்வதைச் செய்யுங்கள்.

    ReplyDelete
  12. Replies
    1. PG TRB ZOOLOGY - STUDY MATERIALS ENGLISH MEDIUM AVAILABLE

      BY
      CONDUCT : 9994098972
      விரும்புவர்களுக்கு இந்த எண்ணை (9994098972) தொடர்பு கொள்ளுங்கள்.

      Delete
  13. பாத்துடோம்..பாத்துட்டோம் இந்த மாதிரி நிறைய பாத்துட்டோம்..

    ReplyDelete
  14. PG-TRB-STUDY MATERIALS DETAILS

    PG-TRB /TET-STUDY MATERIALS AVAILABLE
    PG TRB TAMIL FULL STUDY MATERIALS & QUESTIONS BANK FREE
    PG TRB ENGLISH FULL STUDY MATERIALS & QUESTIONS BANK FREE
    PG TRB CHEMISTRY FULL STUDY MATERIALS E/M & QUESTIONS BANK FREE-E/M
    PG TRB MATHS FULL STUDY MATERIALS & QUESTIONS BANK FREE -EM
    PG TRB HISTORY FULL STUDY MATERIALS T/M & QUESTIONS BANK FREE
    PG TRB ECONOMICS STUDY MATERIALS T/M & QUESTIONS BANK FREE
    PG TRB ZOOLOGY - STUDY MATERIALS ENGLISH MEDIUM
    BY
    KAVIYA COACHING CENTER ( STUDY MATERIALS WITH QUESTIONS BANK ONLY)
    CONDUCT : 9994098972
    விரும்புவர்களுக்கு இந்த எண்ணை (9994098972) தொடர்பு கொள்ளுங்கள்.

    ReplyDelete
  15. கடந்த trb ல் passகூட பன்னாமல் இடம் காலியாக இருந்தது் அரசை விமர்சனம் செய்ய என்ன?

    ReplyDelete
  16. காலிபணியிடம் இருப்பது உண்மை தான் 4000க்கும் மேற்பட்ட காலிபணியிடம் உண்டு இவர் சும்மா பேட்டி மட்டும் தான் கொடுக்கிறார் செயல்ல ஒன்றும் இல்லை

    ReplyDelete
  17. கடந்த ஆண்டு நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தேர்விலும் முறைகேடு பாலிமர் நியுஸ் செய்திகளில் ஆதாரத்தோடு விளக்கம்

    ReplyDelete
    Replies
    1. சென்ற trb யில் தமிழில் என் மார்க் 73 bc திருட்டுப் பசங்க என்ன கோல் மால் செய்தானுங்களோ

      Delete
    2. Sir my (mark 74 pg history bc )

      Delete
    3. 😭😭😭😭😭😡😡😡😡😡😡😡😷😷😷😷

      Delete
  18. 100 upgrade high school list innum kanom ana pgt appointment panna porangalam

    ReplyDelete
    Replies
    1. monday list varum sonnar namma minister aduve innum varala. yeppadi nambuvadu

      Delete
  19. Tet varum nu Sonneenga varala ippa trb ya yanga ippadi yathavathu vainga first

    ReplyDelete
  20. Commerce English material kedikuma

    ReplyDelete
  21. Pgtrb notification la varala july mudinchutu ivanga inimel varumnu solranga adhu yepa varumney therila. Adha arivikavum porathu ila. Arivichatha muthala nadanthungapa.

    ReplyDelete
  22. நண்பர்களே அரசாங்கம் எப்போ வென்றுமென்றாலும் அறிவிக்கும் இதுவே எவ்ளோ நல்ல செய்தி போய் book எடுத்து படிப்பிங்க் களா அதை விட்டு விமர்சனம் செய்றேன்னு காலம் கழிக்ககூடாது 2013க்கு அப்புறம் அறிவிப்பு,2015ல அதுக்கு அப்புறம் 2017ல் இப்போ இப்பவே அறிக்கை விட்டு இருக்கார் அதே பெரிது போய் படிக்கிற வேலைய பாருங்க வேலைய அரசாங்கம் தரும் .அப்புறம் callpar பண்ணின பின்னாடி படிக்க நேரமே இல்லையே படிக்க முடியல என்று சொல்ல வேண்டியது 11.பாடம் படிக்கவே 4 மாதம் முதல்5 மாதம் பிடிக்கும் போய் படிங்க

    ReplyDelete
    Replies
    1. correct நண்பா..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Ean Ithu oru Collection panrathukkana Munarivippaga kooda Irukkalam???

      Delete
    4. நாம கஷ்டப்பட்டு படித்தாலும் பணம் கொடுத்து மார்க் வாங்ற ஜென்மங்களும் இருக்கிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது

      Delete
  23. Zoology questions net slet please send

    ReplyDelete
  24. Zoology questions net slet please send

    ReplyDelete
  25. Plz send microbiology trb materials

    ReplyDelete
  26. முதுகலை பட்டதாரி தேர்வு வரும் என்றால் மகிழ்ச்சி தான். ஆனால் ஆண்டு அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தேர்வுகளில் ஒன்று கூட அறிவிப்பு வரவில்லையே? இப்படி இருக்க தேர்வாளர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். எந்த தேர்வை நம்பி படிப்பது ? முதுகலை பட்டதாரி தேர்விக்கா? பாலிடெக்னிக் தேர்வுக்கா? TET கா?

    ReplyDelete
    Replies
    1. 2017 ல் எத்தனை இடங்கள் அட்டவணையில் பிஜி க்கு இருந்தது கொஞ்சம் நினைவு படுத்துங்கள்
      நன்றாக கூறுகிறேன் இது போன்று நானும் நிறைய நாள் யோசித்தது உண்டு அரசாங்கம் எடுப்பது முழுக்க முழுக்க (கொள்கை முடிவு மட்டுமே ) அதனால் முடிவுகள் மாறிக்கொண்டே இருக்கும் ஆனால் ஒரு நாள் நடக்கும் எனக்கு என் நண்பர் சொன்னது என்றாவது தேர்வு வரட்டும் நாம் அதற்கு தயாரா? நானும் 3 மதிபெண்களில் 3 முறை வாய்ப்பை தவரவிட்டவன் தான் இருந்தும் யென் முயற்சி வெற்றியே அதனால் படிங்க படிச்சுகிட்டே இருங்க ஏனென்றால் சிலர் கிளப்பி விட்டு தாங்கள் தனியாக படித்து கொண்டிருப்பார்கள் எந்த முயற்சியும் வீண் போவதில்லை....
      .....

      Delete
  27. Vacant iruku friends...so prepare well...all the best.

    ReplyDelete
  28. Vacant iruku friends...so prepare well...all the best.

    ReplyDelete
  29. Polytechnic trb coaching centre mathematics material iruntha solunga please.

    ReplyDelete
  30. Polytechnic TRB MATHS FULL NOTES AVAILABLE
    QUESTIONS BANK FREE FREE
    CONTACT
    9994098972

    ReplyDelete
  31. PG TRB முறைகேடுகளை மறைக்கவே இந்த வெற்று அறிவிப்பு

    ReplyDelete
  32. Commerce noted irunthal solunga

    ReplyDelete
  33. 748 Computer teacher posting janaury la poduvonu arivippu vanthuchu...innum podurainga.vethu arivipppu mattum kodukkama seyalla kattunga amachere...

    ReplyDelete
  34. கடலூர்ல physics கொச்சிங் சென்டர் இருந்தா சொல்லுங்க..

    ReplyDelete
  35. கணினி வகுப்பு படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை.

    https://drive.google.com/open?id=1EpwBnlxwJHRA19M9MUDwl9Mz1t0Z50Aa

    https://www.youtube.com/watch?v=zkOVbjpEZ-w&feature=youtu.be

    ReplyDelete
  36. first list la irukavanga nanga but second a cv kuptavangaluku job poiduchu nanga ena pandrathu
    ithu theriatha extra mark 6 easy a varum entha extra mark illama cut off la wait pana easy a extra person venum nu cv kuptu avangalu ku job kudupinga avanga kita evalo vanganenga job kuduka illa avangaluku than job create panengala pwd canditates reserve panirukinga antha post a kongam kongama kasu vangitu kuduthudunga nanga marupadium muthal irunthu padithu cv ku varom ithelam niyama

    ReplyDelete
  37. Commerce vacancies எவ்வளவு எதிர்பார்க்கலாம்?

    ReplyDelete
  38. Commerce vacancies எவ்வளவு எதிர்பார்க்கலாம்?

    ReplyDelete
  39. Hi maths metirial venum bro 8189970043

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி