CPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2018

CPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


ஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதன் தொடக்க விழா அந்தந்த பள்ளிக்கூடங்களில் நடந்தது.விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கணினி மயமாக்கப்பட்டு இணையதளம் மூலம் ஒன்றிணைக்கப்பட்டு கல்வி கற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 200 பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. 12-ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் ‘திறன் வளர்ப்பு பயிற்சி’ தொடர்பான புதிய பாடத்தை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11 லட்சத்து 70 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு கையடக்க கணினி (டேப்லட்) விரைவில் வழங்கப்பட உள்ளது.அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இதற்காக லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள்தமிழகம் வந்து இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளனர்.

விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தபோதிலும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஆசிரியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

கல்வித்துறையில் பல்வேறு பிரிவுகளில் 3 லட்சத்து 72 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

28 comments:

  1. வாய திறந்தாலே அண்ட புளுகு ஆகாச புளுகு...

    ReplyDelete
  2. அறிவிப்பு ஏராளம். விளம்பர யுத்தி. கணினி அலுவலர் கணினி ஆசிரியர் தற்காலிக ஆசிரியர் டெட் ஆசிரியர் வெயிடேச் சரிசெய்யப்படும் இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் முதுகலை ஆசிரியர் தொழில் கல்வி ஆசிரியர் 100 பள்ளி தரம் உயர்வு சிஏ ஆசிரியர் இங்கிலாந்து ஆங்கில ஆசிரியர் தற்போது சிபிஎஸ் இவரது தினமும் ஒரு கற்பனை செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக அறிவிப்புகள் தொடர அம்மாவின் ஆசிர்வாதம்

    ReplyDelete
  3. பொய்யி..!
    பொய்யி..!

    யாரும் நம்பாதிங்க..

    ReplyDelete
  4. அதுக்கு தா படித்த பண்பாளராக கல்வி அமைச்சர் வேணும் னு சொல்றது.
    மாஃபை பாண்டியராஜன் இருந்திருந்தால் சிறப்பாக செயல்பட்டிருப்பார்.அவரையும் ஒழித்து கட்டிடானுங்க.ஊழல்வாதிங்க.

    ReplyDelete
    Replies
    1. அம்மா இருந்திருந்தா இவனுங்களா வாய தொறப்பானுங்களா.

      Delete
  5. மிக்க நன்றி அமைச்சரே..

    ReplyDelete
  6. ஸ்ரீதர் குழு என்று ஒன்று இருந்தது.அது கலைக்கப்பட்டுவிட்டதா? அல்லது காணாமல் போய் விட்டதா?தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.

    ReplyDelete
  7. MP எலக்ஷனுக்காக ஏமாற்று வேலை.

    ReplyDelete
  8. வாயிலே வடை சுடுகிறார்

    ReplyDelete
  9. Sengotta poiya sollu orunal your san death agapran...ni appathan thirunthuva..

    ReplyDelete
  10. Please contact my cell no. 9626742278 who were applied in sri venkadeswara higher school, Velore. It is undertaked by thirumal tirupati devasthanam. They selected only 2013 tet pass. They are not considered 2017 tet pass. Please it is very urgent.

    ReplyDelete
  11. 2013Tet என்ன ஆச்சு?

    ReplyDelete
  12. 2013 Tet minmum posting poduvanga jk

    ReplyDelete
  13. கடந்த வாரம் திங்கள்கிழமை பள்ளி தரம் உயர்வு பட்டியல் வெளியிடப்படும் என்று அமைச்சர் கூறினார் இதுவரை வெளியிடப்படவில்லை,நாளை வெளியிட வாய்ப்பு உள்ளதா????

    ReplyDelete
    Replies
    1. endha Monday.nu sollave illaye!
      Annan kinguda....

      Delete
  14. கடவுள்க்கு தான் தெரியும் Sir .....

    ReplyDelete
  15. GOVERNMENT AIDED SCHOOL VACANCIE FOR PERMANENT POST
    💐BT பட்டதாரி ஆசிரியர் பணியிடம்
    🦋TET-PASS MUST
    🌸SC- SCIENCE- 3
    CANDIDATE MALE&FEMALE
    🌸SC- MATHS-3
    CANDIDATE
    FEMALE 2
    MALE-1
    🌹 MBC- HISTORY
    MALE&FEMALE
    🌺SC-A TAMIL MALE&FEMALE
    🌷SC-A-PET உடற்கல்வி
    MALE&FEMALE
    Immediately call to +917538812269

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி