CPS கணக்கு சீட்டு இன்று முதல் ஆன்லைனில் வழங்கப்படும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2018

CPS கணக்கு சீட்டு இன்று முதல் ஆன்லைனில் வழங்கப்படும்!

CPS ACCOUNT SLIP

Click Here & Download Your CPS Account Slip

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இடம்பெற்றவர்களுக்கு, ஆன்லைனில் ரசீது வழங்கப் படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக் கான, பழைய ஓய்வூதிய திட்டம், 2004ல் நிறுத்தப்பட்டு, புதிதாக சேர்வோருக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது.இத்திட்டத்தில், இடம் பெற்றவர்களுக்கு, சம்பளத்தில் பிடித்தம் செய்ததற்கு ரசீது வழங் கா மலும், பணப்பயன்கிடைக்காமலும் இருந்தது. எனவே, இந்த திட்டத்தை ரத்துசெய்ய, ஆசிரி யர்கள், அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். இந்நிலையில், பங்களிப்பு திட்ட விபரங்கள் அனைத்தும், தமிழக அரசின்கருவூலத்துறை சார்பில், ஆன்லைனில் இணைக்கப்பட்டு உள்ளன.தொடர்ந்து, பங்களிப்பு ஓய்வூதியத்துக்கு பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, வரும், 23ம் தேதி முதல், ஆன்லைனில் ரசீது வழங்கப்படும் என, கருவூலத்துறை கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி