Latest WhatsApp Beta Update - Notification Reply - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2018

Latest WhatsApp Beta Update - Notification Reply


வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா ஆப் யில்அந்நிறுவனம் புதிய அம்சத்தை டெஸ்ட் செய்து சில நாட்களுக்கு முன் தெரியவந்த நிலையில், இந்த அம்சம் பீட்டா ஆப் யில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா ஆப் நோட்டிஃபிகேஷன் சென்டரில் மார்க் ஆஸ் ரீட் (mark as read) என்ற ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.இந்த அம்சம் கொண்டு வாட்ஸ்அப் செயலியில் உங்களுக்கு மெசேஜ் வரும் போது, நோட்டிஃபிகேஷன் சென்டரில் இருந்த படியே அதனை நீங்கள் படித்ததாக மார்க் செய்ய முடியும்.முன்னதாக மெசேஜ் வரும் போது நோட்டிஃபிகேஷன் சென்டரில் ரிப்ளை (Reply) ஆப்ஷன் மட்டுமே காணப்பட்டது, பீட்டா அல்லத பயனர்களுக்கு தற்சமயம் வரை இவ்வாறே காணப்படுகிறது.வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.216 பதிப்பில் இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு மட்டும் தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது.


 முன்னதாக இதே அம்சம் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.214 பதிப்பில் காணப்பட்டது.நோட்டிஃபிகேஷன் சென்டரில் ஒரே சாட்-இல் இருந்து அதிகபட்சம் 51-க்கும் அதிகமான மெசேஜ்களை நேரடியாக மியூட் செய்ய முடியும். இந்த அப்டேட் மார்க் ஆஸ் ரீட் அம்சத்தை நோட்டிஃபிகேஷன் சென்டரில் இதுவரை வழங்கவில்லை.இத்துடன் 2.18.218 பதிப்பில் ஸ்டிக்கர் பிரீவியூ எனும் அம்சம் ஸ்டோர் மற்றும் அப்டேட் பட்டனில் காணப்படுகிறது. எனினும் ஸ்டிக்கர்கள் உருவாக்கப்படுவதால், இன்னும் வழங்கப்படவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி