SBI - கல்வி கடன் பெற 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2018

SBI - கல்வி கடன் பெற 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் !


60% மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே கல்வி கடன் வழங்கப்படும் என்று எஸ்.பி.ஐ வங்கி கூறியுள்ளது.
நிர்வாக ஒதுக்கீட்டு சேர்க்கையாக இருந்தால் கல்வி கடன் வழங்கப்படாது என்று எஸ்.பி.ஐ வங்கி தலைஞாயிறு கிளை மேலாளர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மாணவரின் தந்தை பெயரில் எந்த கடனும் நிலுவையில் இருக்க கூடாது என்றார். மேலும் உத்திரவாத பத்திரம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என்று

முன்னதாக கல்வி கடன் வழக்கு ஒன்றில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே கல்வி கடன் வழங்க முடியும் என வங்கிகள் கூற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி பயில வசதியாக தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தக் கடன் இலவசமாக வழங்கப்படவில்லை. வட்டியுடன் சேர்த்து பிறகு மாணவர்கள் திருப்பி செலுத்தப்போகிறார்கள்.

பின் தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் 60% மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே கல்வி கடன் வழங்கப்படும் என்று எஸ்.பி.ஐ வங்கி உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது மாணவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி