TET - ஆசிரியர் நியமனம்: இரண்டு தேர்வுகள் எதற்கு? உண்மையில் 13,000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2018

TET - ஆசிரியர் நியமனம்: இரண்டு தேர்வுகள் எதற்கு? உண்மையில் 13,000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள்?

பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்குத் தகுதித் தேர்வு, பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு என்று இரண்டு தேர்வுகளை நடத்துவதற்கான அரசாணையை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.
ஆசிரியர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்த வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வை இந்த ஆண்டு உரிய காலத்தில் நடத்தாமல் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தது. இந்நிலையில், இப்படியொரு அறிவிப்பு வந்திருப்பது ஆசிரியர் பயிற்சிப் படிப்பு முடித்த மாணவர்களிடையே கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மாறும் முறை

ஏற்கெனவே, சி-சாட் தேர்வு இப்படித்தானே நடத்தப்படுகிறது. தகுதித் தேர்வு எழுதி, வெற்றி பெற்றவர்கள் காத்திருந்துதானே காலிப் பணியிடங்களில் சேர்கிறார்கள் என்பது வாதத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், அது அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வு. ஒரு குறைந்தபட்ச தகுதி நிர்ணயிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்கள் சில ஆண்டுகள் வரையில் காலிப் பணியிடங்களுக்கு முயலலாம் என்ற ஏற்பாடு அது. அந்தத் தேர்வோடு தமிழ்நாட்டுக்குள் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வை ஒப்பிட முடியாது.


தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சிப் பட்டயம் முடித்தவர்களும் கல்வித் துறையில் பட்டம் பெற்றவர்களும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டு, அந்த வரிசையின் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதே நடைமுறையாக இருந்துவந்தது. அந்த நிலை மாற்றப்பட்டு, அவ்வப்போது உருவாகும் காலிப் பணியிடங்களுக்கு நேரடியாகவே போட்டித் தேர்வை நடத்தி தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும்வகையில்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அந்தத் தகுதித் தேர்வும் போதாமல், இன்னொரு தேர்வும் நடத்தப்படுவதற்கு என்ன காரணம்? அதை அரசு விளக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துகொண்ட வரிசையின் அடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதால் தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. படித்து முடித்து வெகுகாலம் சென்றபிறகு பணிக்கு வருபவர்கள் பாடங்களை  மறந்துவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அப்படியென்றால் இப்போது கல்லூரியிலிருந்து படிப்பை முடித்துவிட்டு வெளியே வருபவர்கள் உடனடியாகத் தகுதித் தேர்வு எழுதி வெற்றிபெறும் வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்குப் பாடங்கள் மறந்துபோகவும் வாய்ப்பில்லை. அப்படியிருந்தும் தகுதித் தேர்வு, பணியிடங்களுக்கான தேர்வு என்று ஏன் இரண்டு தேர்வுகளை நடத்த வேண்டும்?

தகுதி இல்லையா?

இரண்டு கட்டத் தேர்வுகளை எழுதி வென்று ஆசிரியர் பணியில் சேர்பவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள், சிறப்பாகப் பணிபுரிவார்கள் என்று ஒரு நம்பிக்கையும் விதைக்கப்படுகிறது. அப்படியென்றால் அவர்கள் கல்லூரியில் கற்ற கல்வி தரமில்லாததா என்ற கேள்வியும் எழுகிறது. ஓராண்டு படிப்பாக இருந்த பி.எட். படிப்பு இரண்டாண்டுகளாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ஆசிரியர் பயிற்சிப் பட்டயப் படிப்பை முடித்த அனைவருமே அதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து இளங்கலை, முதுகலை என்று படிப்பைத் தொடரவே செய்கிறார்கள். அப்படியும் ஆசிரியர் பணிக்கு அவர்கள் தகுதிபெறவில்லையா என்ன?

வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கவனமாகக் கையாள வேண்டிய அரசு, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் பாதிக்கப்படுபவர்களை நோக்கியே திருப்பிவிடுகிறது என்பதுதான் இந்த அரசாணையின் நோக்கமாக இருக்க முடியும். ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளையும் கல்வித் துறைப் படிப்புகளையும் அரசுதான் கண்காணிக்கிறது. அப்படியென்றால் அவர்களைத் தகுதிப்படுத்த அரசு தவறிவிட்டதா?


பட்டம் பெற்று, வேலைக்குக் காத்திருக்கும் மாணவர்களைக் காத்திருக்கச் சொன்னாலும் தவறு இல்லை. குறைந்த பணியிடங்களுக்கு அதிக போட்டிகள் நிலவும் நிலையில் ஆசிரியராவதற்கான தகுதியே உனக்கு இல்லை என்று தம் மீதான பழியை மாணவர்களை நோக்கி திருப்பி வீசப்போகிறது தமிழக அரசு.

நோக்கம் என்ன?

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவால் வேலை கொடுக்க முடியாத நிலை. ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வுகளாலும் வேலை கொடுக்க முடியாத அல்லது விரும்பாத நிலை. தற்போது மேலும் ஒரு தேர்வு மாணவர்களின் மீது சுமத்தப்படுகிறது.

பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு நடத்திவந்தது. சி.பி.எஸ்.இ. வசம் அந்தப் பொறுப்பு  ஒப்படைக்கப்பட்டது. அடுத்து தேசிய தேர்வுகள் முகமை அந்தத் தேர்வுகளை நடத்தப்போகிறது. தேசிய அளவில் நடக்கும் அந்தத் தேர்வு, உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மட்டுமல்ல. அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஆய்வுப் பட்டம் படிப்பதற்கு ஊக்கத்தொகையையும் வழங்குவதற்கான தேர்வு.

ஒருவேளை ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களுக்கும் அப்படி ஏதாவது உயர்கல்விக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டால் இந்தத் தேர்வின் நோக்கம் உண்மையிலேயே கல்வியின் தரத்தை உயர்த்துவதுதான் என்று ஏற்றுக்கொள்ளலாம். அப்படியெல்லாம் ஏதும் நடக்கப்போவதில்லை.

தெருவுக்கு ஒரு தனியார் பள்ளி திறக்கப்பட்டுவருகிறது. அடிப்படைக் கல்வியை இலவசமாகக் கொடுக்க வேண்டிய அரசு தனியாரைத் தாராளமாக அனுமதிக்கிறது. தனது பொறுப்புகளிலிருந்து நழுவுகிறது. அரசுப் பள்ளிகளே இல்லாமல் போனால், அப்புறம் ஆசிரியர் எதற்கு?  2012-ம் ஆண்டுக்குப் பிறகு நான்காண்டுகள் கழித்து 2017-ல் தேர்வு நடந்தது. அடுத்த தேர்வு எப்போது?

அரசுப் பள்ளிகளின் உண்மை நிலை என்ன?

# அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை - 8,000

# அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் - 30 லட்சம்

# ஆசிரியர் பணியிடங்கள் - 1.32 லட்சம்

# காலிப் பணியிடங்கள் - 13,000

2017 தகுதித் தேர்வு - ஒரு பார்வை

1. எட்டாம் வகுப்பு வரைக்குமான ஆசிரியர் தகுதித் தேர்வுகளை எழுதியவர்கள் - 7.53 லட்சம்

2. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் -  34, 979

3. முதுகலை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் - 2,00,299

4. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் - 3,521

நன்றி - இந்து தமிழ் 

55 comments:

  1. உண்மையிலயே 13000 இருக்கின்றதா?

    ReplyDelete
  2. Oru examo rendu examo anal tet il vegamum illai unmaiyum ellai athanal enakku nambikkaiyum ellai by tet 2013 pass ethukku anomnu nenaikkum canditate.

    ReplyDelete
  3. Replies
    1. கணிப்பொறியில் தான் அனைத்து வேலைகளும் என்று நிலை வந்த பிறகு கணிப்பொறியை இயக்குவதற்கு என்று இதுவரை யாரையும் நியமனம் செய்ய வில்லை. வருவாய்த்துறை வேலை, வேலைவாய்ப்பக வேலை.... என்று அனைத்து வேலைகளும் நடக்கும் இடம் பள்ளி என்றாகிவிட்டது. இப்பணியைச் செய்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் நெருக்கடி கொடுத்து பணிகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இது அரசு அதிகாரிகளுக்கு தெரியாதா? கல்வித்துறை அதிகாரிகள் கேட்கும் நாள்தோறும் பல்வேறு விவரங்கள் என்று பணிச்சுமை நாள்தோறும் நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. பல இடங்களில் பயிற்சி பெற்றவர்கள் இல்லை எனும் போது இந்த நெருக்கடிகளை சமாளிக்க தனியார் நிறுவனங்களை நாடுகின்றனர் என்பது உண்மை. ஒவ்வொரு பள்ளிக்கும் கணிப்பொறி இயக்குவதற்கு என்று தனியாக ஆட்களை நியமிப்பது தான் சிறந்த வழி! பகுதி நேர ஆசிரியர்கள் (கணிப்பொறி) முழுநேரமாகவும், வீட்டில் வந்தும் இந்த பணிச்சுமைகளை செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களை கணிப்பொறி இயக்குபவர்களாகவும் நியமிக்கலாம். செய்யுமா அரசு? செய்யவேண்டியவற்றை செய்யாமல் பிறகு விசாரணை என்றால் எப்படி? நிறைய அலுவலகங்களில் ஆட்களே இல்லை. பிறகு என்னதான் செய்வார்கள்?

      Delete
  4. Tet marklayae posting potal yarukum entha pathipum varadu

    ReplyDelete
  5. Good best way for selection tet pass and employment seniority

    ReplyDelete
  6. 8000 அரசு பள்ளிகளில் வெறும் 635 உடற்கல்வி காலி பணியிடங்களா? ஏறக்குறைய 1200 காலி பணியிடங்கள் உள்ளன.எனவே அவற்றை நிரப்ப வேண்டுகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. Sgt vacantum iruku....union & ADW school lot of vacancy ... 2013 I'll kuraivana post pottinga.....ipoo vacant irukumppthu athai en fill pannna thayakam...pls yaravathu help pannnunga sr...

      Delete
    2. Respected sr..the national Adi drvidar welfare commissioner pls help me sir...Adw school students save to education immediately take action,,..ungala mattum than mudium sr.pls help help help thank u sr....

      Delete
  7. Tet pass and employment seniority correct

    ReplyDelete
  8. ஆசிரியர்களுக்கு வணக்கம்..

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டும் பல்வேறு உயர் நிலை பணிகளுக்கு பதிவு மூப்பு (employment seniority) மட்டுமே அல்லது ஒரு சிலவற்றில் வேலை அனுபவம் ( work experience) சேர்ந்து ஒரே ஒரு தேர்வின் அடிப்படையில் தேர்தெடுக்கப்படுகின்றனர். (அரசு விளம்பர அறிக்கை மற்றும் வெய்ட்டேஜ் மதிப்பெண்கள் முறை கீழே வகைப்படுத்தப்பட்டுள்ளன ).
    ஆனால்

    1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கும்,

    6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும்
    இரண்டு தேர்வு முறையை ஆசிரியர் தேர்வு வாரியம்
    ( TRB) கடைபிடிக்க சமீபத்தில் காலம் கடந்அ வெளியான அரசானை எண் :149 ஆனது வேடிக்கையானது; விசித்திரமானது; முரண்பாடானது;
    சமுக நீதிக்கு எதிரானது ..

    1. முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PG TRB EXAM) 7 marks weightage கணக்கிடப்படுகிறது.

    2. விரிவுரையாளர் (polytechnic college exam) 5 marks weightage கணக்கீடப்படுகிறது.

    4. உதவி பேராசிரியர் (Arts college) 25 marks weightage கணக்கீடப்படுகிறது.

    5.உதவி பேராசிரியர் ( law college) 25 marks weightage எடுக்கப்படுகிறது.

    6.சிறப்பாசிரியர்கள் (special teacher exam) 5 mark கணக்கீடப்படுகிறது.

    7. ஆய்வக உதவியாளர் ( lab assistant exam school education dept) 17 marks weightage கணக்கீடப்படுகிறது.
    மேலும்
    ஆசிரியர் தகுதி தேர்வில் அண்டை மாநிலமான கேரளாவில் ஒரே தேர்வில்
    TET MARK - 80%
    EMP SENIORITY - 20% WEIGHTAGE MARKS கணக்கீடப்படுகிறது.
    பாண்டிச்சேரியில்
    TET MARK - 90%
    EMP SENIORITY - 10%
    WEIGHTAGE MARKS கணக்கீடப்படுகிறது..

    2013 ஆசிரியர்கள் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்று அரசானை எண்: 252 மற்றும் 181 ன்படி சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பிறகு புதிய அரசானை எண்: 71 மற்றும் 25 அரசு கொண்டுவந்தால் நாங்கள் முழுமையாக பாதித்தோம். மேலும் தேர்வு முடிவுகள் வெளியீட்டு ஐந்து வருடங்கள் கழித்து புதிய அரசானை எண் : 149 தமிழக அரசு அறிவித்துள்ள அரசானை எங்களை மேலும் மேலும் பாதிப்படையச் செய்கிறது என்று நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தால் நீதி கிடைக்குமா... ? சிந்தித்துப் பாருங்கள் ஆசிரியர்களே...

    - ரா. சக்தி - ஊத்தங்கரை .

    ReplyDelete
    Replies
    1. நீதி!! நீதீமன்றத்திலிருந்து!!
      "சாட்சிகாரன்(நீதிமன்றம்) காலுல விழறதவிட சண்டைக்காரன்(அரசு) காலுல விழறது மேல்"

      Delete
    2. நீதி எங்கே கிடைக்கும்? அப்படியே கிடைத்தாலும் இது அரசின் கொள்கை-னு சொல்லுவாங்க. அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிடாது-னு நீதிமன்றம் சொல்லும். ஒருத்தன் கால பிடிச்சு வாழறத விட நம்ம வாழ்க்கையை நாமே தீர்மானிப்போம். இவர்களை நம்பாது இயற்கையை நம்பிய விவாசாயி.

      Delete
  9. 2 வது exam ஆவது announce பன்னி தொலைங்கடா

    ReplyDelete
  10. கண்ணா மூச்சு விளையாட்டு, ஆட்டம் என்னவோ பழையது தான் ஆனால் விதி முறைகள் தான் முழுமையாக இயற்றப்படவில்லை.

    எங்கே போய் முடியுமோ.

    ReplyDelete
  11. மீண்டும் வழக்கா முடியல, இன்னும் 3 வருடம் அப்ப ஆகும்.

    ReplyDelete
  12. இரண்டு தேர்வு வைப்பது தான் இனி சரியான முடிவு ஆகும். தற்போது TNPSC தேர்வில் 17 லட்சம் பேர் எழுதினர். இதற்காக தேர்வு மையங்கள் மிக அதிக அளவில் ஒதுக்கப்பட்டன ஒரு சில இடங்களில் ஆசிரியர் துணையுடன் முறைகேடுகள் செய்யப்படுகிறது.எனவே தேர்வு எழுதிய 17 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு குறிப்பிட்ட தேர்வு மையங்களில் அதே தரத்தில் வினாத்தாள் அமைக்கப்பட்டு தேர்வு நடத்துவதன் மூலம் முறைகேடு களை தடுக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்களின் பணியை விட முதுகலை ஆசிரியர் பணி தான் உயர்ந்தது.அவர்களும் இனி இரண்டு தேர்வு எழுத வேண்டும் என்று தங்களால் கூற முடியுமா.இல்லை இந்த அரசாங்கம் தான் அப்படி ஒரு முடிவை எடுக்க முடியுமா?

      Delete
  13. Avanunga panna thapu muudi maraika than iPadi oru nadagam....anal ithu year ketpathu, ivanunga thala ganam thalai virithu adugirathu......2013 tet 82 pass mp election jaya cm......ippo enna reason theriyala..... Ezai vaitril adipathe ivanungaluku velai.....

    ReplyDelete
  14. குழந்தைகளைப் படிக்க வைத்துக் கொண்டுள்ளபோது நாமும் எத்தனை தேர்வுகளுக்குத் தான் படித்துக் கொண்டே இருப்பது? தேர்ச்சி பெற்றும் என்ன பிரயோஜனம்? என்ன விடிவுகாலம்? இஷ்டத்திற்கு தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்து வீடு வீடாகச் சென்று ஆள்பிடித்து இருக்கும் சொத்துகள் அனைத்தையும் விற்றுப் படித்துவிட்டு இப்பொழுது தேர்வு, தேர்வு என்று வாழ்க்கையைத் தொலைத்து தேர்வில் தேர்ச்சி பெற்றும் வேலைக்கு வழி இல்லாமல் நொந்து கிடக்கும் வகையில் அரசியல் வியாதிகளும், அரசு அதிகாரிகளும் நாளுக்கு ஒரு திட்டம் கொண்டுவந்து வாழ்க்கையை நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். தகுதி இருக்கா என்றார்கள்! அதிகமாகவே இருக்கு என்றோம். அதில் வயது அதிகமாக உள்ளவர்கள் பணிவாய்ப்பே பெற்றுவிடக்கூடாது என்று அறிவியல் பூர்வமான முறையில் கணக்கிட்டு வாழ்க்கையை கெடுத்தார்கள். இப்பொழுது மற்றோர் தேர்வு எழுத வேண்டும். இப்படியே தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பது தற்போது படித்தவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்காது. ஆனால் குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் சாப்பாடு போட வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களின் நிலை? வரலாறு காணாத கல்விச் செலவுகள் என்று சமாளித்தாக வேண்டுமே! நாங்கள் போய் கோச்சிங் சென்டரிலேயே தங்கி பயில முடியுமா? எப்போது இந்த நிலை மாறுமோ?.....

    ReplyDelete
    Replies
    1. Ithellam vida kodumai ennaa theriyuma. Schoolku velai kettu pona ungaluku d.ted..Tet pass lam pathathu poitu mela ethachum mudichutu vaanga nu solranga. Unmai ennaana tet pass aahirunthalum private schla no vacant.. veetla avamaanam pattathu thaan micham. Innum enga kondu poiyu vidumo theriyala.

      Delete
  15. Any way, please announce the syllabus as soon as possible, there is heavy competition for trb exam we have to prepare at least two months.

    ReplyDelete
  16. Engu athiga mathippen (Tet) eduthavarkalai Vida kuraivaana mathippen eduthavarkal thaan athigam avarkal 2013il weitage all pathikkappattu tharpothu athiga mathippen eduthiranthal avarkal mana nilai mattravarkalukku purium

    ReplyDelete
  17. Engu athiga mathippen (Tet) eduthavarkalai Vida kuraivaana mathippen eduthavarkal thaan athigam avarkal 2013il weitage all pathikkappattu tharpothu athiga mathippen eduthiranthal avarkal mana nilai mattravarkalukku purium

    ReplyDelete
  18. கேனப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாம!!! இது நம்ம தமிழ் நாட்லதாங்க நடக்குது,ஏங்க ஏற்கனவே டெட்ல பாஸ் பண்ணியாச்சு,மறுபடியும் இன்னொறு டெஸ்ட்டா? நண்பர்களே யாருமே நியமனத் தேர்வு எழுதமாட்டோம்னு ஒரு முடிவுக்கு வந்தா நல்லாயிருக்கும்னு தோனுதுனங்க!!!

    ReplyDelete
  19. Unmaiya 13,000 vacancy irukkaaaaa..??????

    ReplyDelete
  20. Intha varudam tet exam varuma sir pls ans me

    ReplyDelete
  21. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்."""""தயவு செய்து கல்வி மந்திரி இந்தக் குறள மறுபடியும் படிச்சுப்பாருங்,இந்தக் குறள படிச்ச பிறகாவது,சரியான முடிவா எடுங்க;டெட் பாஸ் பண்ண எங்களுக்கு நல்ல முடிவு சொல்லுங்க,நியமனத் தேர்வு என ஒன்று தேவையே இல்லை,மாற்று வழிகளை யோசியுங்கள்,முடியவில்லையென்றால் பொறுப்பை எங்களிடத்தில் விடுங்கள்.

    ReplyDelete
  22. 100 தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகள் பட்டியலை இதுவரை சரியான நேரத்தில் கொடுக்க முடியவில்லை. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அரசுக்கு புரிகிறதா இல்லை புரியாமல் செயல்படாமல் உள்ளதா

    ReplyDelete
  23. Eppa samy yathavathu exam vainga first

    ReplyDelete
  24. Enaku oru doubt yaravathu solunga plzzzz aided school Ku ini join panunalum 2, Tet exam um pass aganuma illa eligibility test mattum pothuma frdssss plzzzz solunga unga number send panunga Na ketukidraen

    ReplyDelete
    Replies
    1. Aided schl ku inum G.o vidala nu soldranga.epo varum G.o .any idea

      Delete
    2. PGtrb eppo varum anna sollunga please...atleast evalo monthla varum sollunga anna coaching classla join panna..... coaching class la amount kattuna waste aaidum sollunga anna trb late aagumna fees katti padikkalam adhan kekren anna

      Delete
  25. இரண்டு தேர்வுகளில் வெற்றி பெற்ற பிறகு... பணிநியமன ஆனை வாங்கும் போது...மற்றொரு தேர்வு எழுத வேண்டும் ... சொன்னாலும் சொல்லுவாங்கப்பா...

    ReplyDelete
    Replies
    1. Sir அது 2018 டெட் candidate kku சொல்லுவாங்க.

      Delete
  26. Hey entha examna vekatum nalla padicha vetri nitchayam

    ReplyDelete
    Replies
    1. Sir ippo 2nd exam becha pass panna velai apram ethuku sir comment 35000 summava padinga sir nan tet la 116 mark enna panrathu velai venum avanga ettho oru satam potrukanga at hai pana tum patinga pass panuvam ok nama kestam in tha exam than mutivu ok padinga plss

      Delete
  27. M.P.C PG TRB COACHING CENTER FOR MATHEMATICS – ERODE
    * New batch starts from August 12th Sunday
    * Class timing Sunday 10.00 A.M to 5.00 P.M
    * 5 Months course, last batch in M.P.C before PG TRB 2018-
    2019
    * For details: 9042071667

    ReplyDelete
  28. Friends pass pann ellorum porattam pannalame... 2nd examukku opposite a

    ReplyDelete
  29. Friends case podalama? Potta win pannuvama?

    ReplyDelete
  30. case வேண்டாம் பாஸ் பண்ணியவர்களுக்கு உடன் தேர்வு வைப்பாரா இந்த பணம் தின்னி மந்திரி?

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. Niyamanathervuku syllabus sollunga frnds🙇

    ReplyDelete
  33. இரண்டு எக்ஸாம் கண்டிப்பாக வேண்டும்.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி