TRB - சிறப்பாசிரியர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை உடனே வெளியிட கோரி மனு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2018

TRB - சிறப்பாசிரியர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை உடனே வெளியிட கோரி மனு!

சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23 -ஆம் தேதி உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வைஎழுதியுள்ளோம்தேர்வு நடைபெற்று 9 மாதங்களாக முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், கடந்த ஜூன் 14 -ஆம் தேதி தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது மேலும், நாங்கள் விடுத்த கோரிக்கைக்கு மதிப்பளித்து ஓ.எம்.ஆர். நகலையும் ஆசிரியர் தேர்வு வாரிய வளாக கணினி திரையில் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்ததுசிறப்பாசிரியர் போட்டித் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு 15 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கான  பட்டியலையும் விரைவாக வெளியிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 comments:

  1. தீர்ப்பு எப்படி வரும் தெரியுமா?
    அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று....

    ReplyDelete
    Replies
    1. Trb polytechnic court news ah solringa sir

      Delete
  2. pg trb second list epa poduvanga athuku manu kodupathu eppadi

    ReplyDelete
  3. தயவுசெய்து எல்லாருடைய மதிப்பெண்களையும் கோடிங் உடன் வெளியிடவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி