TRB - உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2018

TRB - உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு!

அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களைநிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) புதன்கிழமை வெளியிட உள்ளது.

பத்திரிகைகள் மூலமும், www.trb.tn.nic.in என்ற வாரியத்தின் இணையதளத்திலும் இந்த அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது.

இதுகுறித்து டி.ஆர்.பி. வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள 186 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் போட்டி எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமன அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

இந்தத் தேர்வுக்கு ஜூலை 23 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை டி.ஆர்.பி. இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, பாட வாரியான காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை டி.ஆர்.பி. இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 comments:

  1. Arts and science college professor Ku TRB varuma?

    ReplyDelete
  2. Arts and science college professor Ku TRB varuma?

    ReplyDelete
  3. இந்த அறிவிப்பை போன்றே அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடத்திற்கும் எழுத்து தேர்வு வைக்க வேண்டுமென கல்விச்செய்தி வாசகர் என்ற முறையில் அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

    ReplyDelete
  4. Arts and science professor Kim PhD vanuma ?or set okva

    ReplyDelete
  5. அரசு கலை கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களாக பணிப் புரிபவர்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வு என்றால் தனியார் கல்லூரிகளில் பணி புரிபவர்களுக்கு?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி