Vidyarthi Vigyan Manthan - மாணவர்கள் அறிவியல் திறனறி தேர்வுக்கு செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2018

Vidyarthi Vigyan Manthan - மாணவர்கள் அறிவியல் திறனறி தேர்வுக்கு செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான பிரசார் நிறுவனம், என்சிஇஆர்டியின் விபா நிறுவனம் ஆகியவை இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வு தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தேர்வு நவம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் இணைய வழியில் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி, கணினி மூலம் தேர்வு எழுதலாம். ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தேர்வு எழுதலாம். தேர்வுக்கட்டணம் ரூ100 செலுத்த வேண்டும்.

செப்டம்பர் 30ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்த தேர்வு எழுதலாம். 6 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடக்கும். மேற்கண்ட தேர்வு எழுத  விரும்புவோர் www.vvm.org.in என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி