நாடு முழுவதும் 24 லட்சம் அரசு காலி பணியிடங்கள் - மத்திய அரசு தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2018

நாடு முழுவதும் 24 லட்சம் அரசு காலி பணியிடங்கள் - மத்திய அரசு தகவல்!


2018 ம் ஆண்டின் பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை பார்லி.,யின் இரு அவைகளிலும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.
அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களின் அடிப்படையிலான புள்ளி விபரத்தின்படி நாடு முழுவதும்24 லட்சம் மத்திய மற்றும் மாநில அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது தெரிய வந்துள்ளது.இதில் மிக அதிபட்சமாக மத்திய, மாநில மற்றும் யூனியன்பிரதேசங்களில் பள்ளிகளில் 10.1 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

காவல் துறையில் 5.4 லட்சம் இடங்களும், ரயில்வேயில் 2.4 லட்சம் இடங்களும், அங்கன்வாடி பணியாளர்களில் 2.2 லட்சம் இடங்களும், சுகாதார மையங்களில் 1.5 லட்சம் இடங்களும், ராணுவத்தில் 62,084 இடங்களும், துணை ராணுவத்தில் 61,509 இடங்களும், தபால் துறையில் 54,263 இடங்களும், எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 21,740 இடங்களும், உயர்கல்வித்துறையில் 12,020 இடங்களும், கோர்ட்களில் 5853 இடங்களும் காலியாக உள்ளது தெரிய வந்துள்ளது.

2 comments:

  1. Udanea adhai fill panniduvangala?

    ReplyDelete
  2. Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) recently announced the recruitment drive for Sub Inspector of Police (Technical) on its official website. The TN Police Recruitment 2018 process will be conducted by TNUSRB. The announcement authority Tamil Nadu Police Special Youth Department Board announced the recruitment drive on the official website. The recruitment drive is announced for 309 vacancies for the posts of Sub Inspector (SI) in Technical. Click Here to know more.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி