தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கு 2% உள் ஒதுக்கீடு: சுதந்திர தின கொடியேற்றி முதல்வர் பழனிசாமி அறிவிப்ப - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2018

தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கு 2% உள் ஒதுக்கீடு: சுதந்திர தின கொடியேற்றி முதல்வர் பழனிசாமி அறிவிப்ப

சர்வதேச, தேசிய, மாநில விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணியில் தகுதி அடிப்படையில் 2 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.
மேலும், தியாகிகளுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத் தையும் உயர்த்தி அறிவித்துள்ளார்.நாட்டின் 72-வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் கே.பழனிசாமி, தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து அவர் தனது சுதந்திர தின உரையில் பேசியதாவது:

பல்லாயிரக்கணக்கான நமது சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் உடைமைகள் மற்றும் இன்னுயிரை ஈந்து பல ஆண்டுகள் பாடுபட்டதன் விளைவாக பெறப்பட்டது நம் சுதந்திரம். சுதந்திரத்துக்காக உயிர்த் தியாகம் செய்த செம்மல்கள் நிறைந்த மாநிலம் தமிழகமாகும். நாம் பெற்ற சுதந்திரத்துக்காக இன்னுயிர் நீத்த வீரத் தியாகிகளின் தியாகத்தை நாம் அனைவரும் நினைத்து போற்றிட வேண்டும்.இந்த அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து இன்றுவரை, மாநிலம் முழுவதும் ரூ.22,439 கோடியே 92 லட்சம் மதிப்பிலான 41,031 திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. ரூ.16,681 கோடியே 84 லட்சம் மதிப்பிலான 7,596 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இந்த அரசு நடத்திய சட்டப் போராட்டத்தால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டது.ஆணையம் எடுத்த முடிவின்படி, ஜூன் மாதம் நமக்கு வரவேண்டிய 9.18 டிஎம்சி தண்ணீர் கிடைத்தது. ஜூலை மாதம் நமக்கு கிடைக்க வேண்டியது 31.24 டிஎம்சி. ஆனால், தென்மேற்கு பருவமழையால், ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் மேட்டூர் அணைக்கு வந்தது. 5 ஆண்டுகளுக்குப்பின் அணை தன் முழு கொள்ளளவை 2 முறை எட்டியது. இதனால் ஜூலை 19-ம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

விவசாயிகள் நலனுக்காக எடுத்த நடவடிக்கைகளால், 2011-12 முதல் 2017-18 வரை உணவு தானிய உற்பத்தி 5 முறை ஒரு கோடிலட்சம் டன்னை கடந்து சாதனை படைத்துள்ளது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ. 1,824 கோடியே 20 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. அத்திக்கடவு- அவிநாசி திட்டம் ரூ.1,652 கோடியில் மாநில நிதியிலேயே செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இயற்கை வளங்களை எதிர் வரும் சந்ததியினருக்கு நல்ல முறையில் விட்டுச் செல்வது அனை வரின் கடமை என்பதை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட் கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதை வெற்றிகரமாக செயல்படுத்த பொதுமக்கள், வணிகர்கள் என அனைவரது ஒத்துழைப்பையும் நான்கோருகிறேன்.தமிழகம் தற்போது இந்தியா விலேயே 2 -வது பெரிய பொருளா தாரமாநிலமாக விளங்குகிறது. தொழிற்சாலைகள் எண்ணிக்கை, பணியமர்த்தப்பட்ட நபர்கள் எண்ணிக்கையில் நாட்டில் முதலிடத் தையும் வகிக்கிறது. இந்த 2018-ல் தொழில் முதலீட்டுக்கு சிறந்த மாநிலமாக டெல்லிக்கு அடுத்த 2-ம் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் புதிய சாலைகள், பாலங்களை உருவாக்கவும் இருக்கும் சாலைகளை அகலப் படுத்தவும் துறைமுகங்கள் மேம்பாட்டுக்காகவும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்த இந்த அரசு தொடர்ந்து செயல்படும்.விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கணைகளை ஊக்குவிக்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு கூட்டமைப்புகள் நடத்தும் தேசிய அளவிலான முது நிலை போட்டிகளில் தமிழகம் சார்பில் அல்லது தமிழகம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் வென் றாலோ, அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டி களில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றாலோ, அல்லது நம் நாட்டின் சார்பில் கலந்து கொண் டால் கூட அவர்களுக்கு தமிழக அரசு அல்லது தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட பதவிகளில் தகுதியின் அடிப்படையில் 2 சதவீதம் வரை உள் ஒதுக்கீடாக வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு, விரிவான வழி காட்டு நெறிமுறைகள் வகுக்கப் படும்.

நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த தியாகிகளை சிறப்பிக்க அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.13 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும். சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ.6,500-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்படும். விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்று நாட்டுக்காக குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றியவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், அவர்கள் வாரிசுகளுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,500-ல் இருந்து ரூ.7, 500 ஆக உயர்த்தப்படும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி