வருமானவரி கணக்குத் தாக்கல் செய்ய வரும் 31-ம் தேதி கடைசி நாள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2018

வருமானவரி கணக்குத் தாக்கல் செய்ய வரும் 31-ம் தேதி கடைசி நாள்!

வருமானவரி கணக்குத் தாக்கல் செய்ய வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும். மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடப்பு 2018-19 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2017-18 நிதி யாண்டு) வருமானவரி கணக்கைத்தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31-ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆன்லைன் மூலம் வருமானவரி தாக்கல் செய்யும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரண மாக வரி செலுத்துபவர்கள் வரு மானவரிக் கணக்கைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினர்.இதையடுத்து, வருமானவரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:

வருமானவரிச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 234எப் பிரிவின் படி, வருமானவரிக் கணக்கை வரும் 31-ம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோருக்கு கட்டணம் ஏதும் இல்லை. மொத்த வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரிக் கணக்கை வரும் 31-ம் தேதிக்குப் பிறகு அதே சமயம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் தாமதக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரிக் கணக்கை வரும் 31-ம் தேதிக்குப் பிறகு, ஆனால் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமதக் கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும்.

மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரிக் கணக்கை வரும்டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு, ஆனால் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமதக் கட்டணமாகரூ.10,000 செலுத்த வேண்டும்.வருமானவரிச் சட்டம் 139-வது பிரிவின்கீழ், சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு ஆண்டின் இறுதிக்குப் பிறகு எவ்வித வருமானவரிக் கணக்கும் தாக்கல் செய்ய இயலாது. அதாவது, மதிப்பீட்டு ஆண்டான 2018-19-க்கு, அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது.

மின்னணு முறையில் தாக்கல்:

மேலும், அனைத்து வரி செலுத்து வோரும் தங்களது வருமானவரிக் கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் ஒரேவொரு வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர்அல்லது தோராய வருமானம் உள்ளோர் ஐடிஆர்-1 (சஹஜ்) அல்லது ஐடிஆர்-4 (சுகம்) படிவங்களில்வருமானவரிக் கணக்கை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு காகித வடிவில் வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம்.

இதன்படி, முந்தைய ஆண்டில் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவர்கள், ரூ.5 லட்சத்துக்கு உட்பட்ட மொத்த வருமானம் உள்ளவர்கள் மற்றும் தங்களது வருமானவரிக் கணக்கில் திரும்பக் கிடைக்க வேண்டிய தொகை கோராதவர்கள் மேற்கண்ட முறையில் காகித வடிவில் வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி