ஆசிரியர்களுக்கான தேசிய விருது எண்ணிக்கை குறைப்பு : தமிழகத்திற்கு 3 விருதுகள் மட்டுமே வாய்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2018

ஆசிரியர்களுக்கான தேசிய விருது எண்ணிக்கை குறைப்பு : தமிழகத்திற்கு 3 விருதுகள் மட்டுமே வாய்ப்பு!

ஆசிரியர்களுக்கான தேசிய விருது எண்ணிக்கை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் 45 விருதுகள் மட்டுமே வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது.
இதுவரை தமிழகத்துக்கு 23 விருதுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இனி 3 விருதுகளுக்கு மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்குவதில், புதிய கட்டுப்பாடுகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் இல்லாவிட்டால் விருது கிடையாது, சி.பி.எஸ்.இ., தவிர, மற்ற தனியார் பள்ளிகளுக்கும் விருது இல்லை என தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே போல இந்த ஆண்டு, தேசிய விருது பெறும் நடைமுறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசிரியர்கள் மட்டும், விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.  தனியார் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழக பாடத்திட்டத்தில் உள்ள, சுயநிதி பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் விண்ணப்பிக்க முடியாது. விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் வகுப்புகளுக்கு ஒருநாள் கூட தவறாமல் சென்றிருக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் தவறாமல் பங்கேற்றிருக்க வேண்டும். டியூஷன் என்ற, வணிக ரீதியான கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கக் கூடாது என ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

1 comment:

  1. M.P.C PG TRB COACHING CENTER FOR MATHEMATICS – ERODE
    * New batch starts from August 12th Sunday
    * Class timing Sunday 10.00 A.M to 5.00 P.M
    * 5 Months course, last batch in M.P.C before PG TRB 2018 - 2019
    * For details: 9042071667

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி