ஆசிரியர் ஊதிய முரண்பாடு ஒருநபர் குழுவுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2018

ஆசிரியர் ஊதிய முரண்பாடு ஒருநபர் குழுவுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி கடந்த 1-10-2017 முதல் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது.

7வது ஊதியக்குழுவில் நிறைய முரண்பாடுகள் உள்ளது என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 7வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய, நிதித்துறை செயலாளர் (செலவினம்) சித்திக் தலைமையில் ஒரு நபர் கமிட்டி விசாரணை நடத்தி ஜூலை 31ம் தேதிக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. ஆனால் சித்திக் கமிட்டி தனது இறுதி அறிக்கையை ஜூலை 31ம் தேதி அரசுக்கு அளிக்கவில்லை. தற்போது அந்த கமிட்டியின் காலஅவகாசத்தை மேலும் 3மாதம் நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

 இதுகுறித்து தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில், “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக நிதித்துறை செயலாளர் சித்திக் (செலவினம்) தலைமையில் அமைக்கப்பட்ட குழுவுக்கு விதிக்கப்பட்ட அவகாசம் கடந்த 31ம் தேதி முடிவடைந்தது. எனவே இந்த குழுவின் கால அவகாசம் மேலும் 3 மாதம் (31-10-2018 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி