அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான முதல்வர் பேச்சுக்கு ஜாக்டோ-ஜியோ 4ம் தேதி பதில்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2018

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான முதல்வர் பேச்சுக்கு ஜாக்டோ-ஜியோ 4ம் தேதி பதில்!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு ஜாக்டோ-ஜியோ 4ம்  தேதி கூட்டத்தை கூட்டி பதிலளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

சேலத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்தும் பேசினார். அப்போது அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. அதை வாங்கிக் கொண்டு பணியை செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார். மேலும், ஆசிரியர்களின் ஊதியத்தை பொறியியல் பட்டதாரிகளின் ஊதியத்துடன் ஒப்பிட்டுக் காட்டி பேசியுள்ளார்.

இது அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ இதுகுறித்து தங்களின் நிலையை வெளிப்படுத்த 4ம் தேதி ஜாக்டோ-ஜியோ கூட்டம் கூடி முதல்வரின் பேச்சுக்கு முறையான விளக்கம் மற்றும் பதிலை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. 

5 comments:

  1. Replies
    1. govt vela kedaikkalandra virakthi?

      Delete
    2. super speech ah . ok apo antha speechah open meetingla pesa solunga paarkalam.

      Delete
    3. correct speech, i accept Ur salary increment requisition but u are all accept one condition not give good result and not create any single doctor in ur school u will relive ur job

      Delete
  2. M.P.C PG TRB COACHING CENTER FOR MATHEMATICS – ERODE
    * New batch starts from August 12th Sunday
    * Class timing Sunday 10.00 A.M to 5.00 P.M
    * 5 Months course, last batch in M.P.C before PG TRB 2018-
    2019
    * For details: 9042071667

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி