அண்ணாவை நோக்கி 4.00 மணிக்கு பயணிக்கிறார் கருணாநிதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2018

அண்ணாவை நோக்கி 4.00 மணிக்கு பயணிக்கிறார் கருணாநிதி


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் இறுதி ஊர்வலமாக மாலை 4.00 மணிக்கு மெரினாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடலை மெரினாவில்  அடக்கம் செய்வதற்கு திமுக வைத்த கோரிக்கையை தமிழக அரசு முதலில் நிராகரித்தது. இதையடுத்து, கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு உத்தரவு வழங்க சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அவசர வழக்கை தொடர்ந்தது.

அரசியலில் இருக்கும் போது இடஒதுக்கீட்டுக்காக போராடிய கருணாநிதி மறைந்த பிறகும் இடஒதுக்கீட்டான போராடத்தை தொடங்கினார்.

சுமார் 13 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு இடஒதுக்கீட்டில் கருணாநிதி மீண்டும் வெற்றியைப் பெற்றார். கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, கருணாநிதியின் உடலை அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4.00 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. ராஜாஜி அரங்கில் இருந்து மெரினாவுக்கு கருணாநிதியின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து கருணாநிதியின் இறுதிச்சடங்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.  

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி