4102 வங்கி அதிகாரி வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2018

4102 வங்கி அதிகாரி வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

பொதுத்துறை வங்கிகளில் காலியாக 4102 புரொபஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 4102

பணி: Probationary Officer, Management Trainee (CRP PO/MT-VIII)

வங்கிகள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Allahabad Bank - 784
2. Bank of India - 965
3. Canara Bank - 1200
4. Corporation Bank - 84
5. UCO Bank - 550
6. Union Bank of India - 519

வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100 கட்டணமாக செலுத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.09.2018

ஆன்லைன் முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.10.2018, 14.10.2018, 201.10.2018 மற்றும் 21.10.2018

முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 18.11.2018

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி, பிப்ரவரி 2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி