அரசுப் பள்ளிகளில் ரூ.48 கோடியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி: அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2018

அரசுப் பள்ளிகளில் ரூ.48 கோடியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி: அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் 2,448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.48.96 கோடியில் பாதுகாக்கப்பட்ட தூய்மையான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் நலன் கருதி குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக குடிநீர் வசதிகள் தேவைப்படும் 2,448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.48 கோடியே 96 லட்சம் செலவில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதனை சட்டப்பேரவையில் கடந்த ஜூன் மாதம் 1 -ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.


அதன்படி ஒரு குடிநீர் சுத்திகரிப்பு கருவியின் விலை ரூ.2 லட்சம். ஒரு பள்ளிக்கு ஒரு சுத்திகரிப்பு கருவி வீதம் 2,448 பள்ளிகளுக்கு ரூ.48.96 கோடி செலவு ஏற்படும். இந்தச் செலவினத்தை அந்தந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து மேற்கொண்டு ஆட்சியர்கள் வாயிலாக இந்த பணிகள் செய்து முடிக்க வேண்டும் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

10 comments:


  1. Tet தேர்ச்சி பெற்று 2018 ல் நடைபெற உள்ள ஆசிரியர் நியமன போட்டித்தேர்வுக்கு தயாராகும் அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களை பாடவாரியாக இணைக்க வாட்சாப் குழுக்களுக்கான Links இருந்தால் அனுப்பவும், தயவு செய்து

    ReplyDelete
  2. Sir I am also Sgt. Tet passed. MBC mathematics

    ReplyDelete
  3. yerkanave m.l.a fund.la r.o purifier machine mostly school.la irukku... but work agala.. .
    apa 48kodi epadi thevapadum?

    ReplyDelete
  4. BT maths, history,NO TET.place:Theni 9578048717

    ReplyDelete
  5. Fake tet illamal bt posting illai sure.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி