600 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2018

600 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

தமிழகத்தில் காலியாகவுள்ள 600-க்கும் அதிகமானகிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த இடங்கள் கிராம உதவியாளர்களைக் கொண்டு தகுதிஅடிப்படையில் பதவி உயர்வின் மூலமும், கருணை அடிப்படையில் நியமனம் செய்யவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதுதமிழகத்தில் 10,000-த்துக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் குரூப் 4 பிரிவின் கீழ் வருகின்றனபெரும்பாலான இடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலானஇடங்கள், பதவி உயர்வு, கருணை அடிப்படையில் நிரப்பப்படுகின்றன609 இடங்கள்2017-18-ஆம் ஆண்டுக்கான கிராம நிர்வாக அலுவலர்களுக்கான காலிப் பணியிட மதிப்பீட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளதுஇந்த மதிப்பீட்டின்படி, 609 காலியிடங்கள் உள்ளன. அதில், 341 காலியிடங்கள் கருணை அடிப்படையிலும், 268 இடங்கள் கிராம உதவியாளர்களுக்கு தகுதி அடிப்படையில் பதவி உயர்வு அளிப்பதன் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன. எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு காலியிடங்கள் உள்ளன என்கிற விவரங்களை வருவாய் நிர்வாக ஆணையரகம் வெளியிட்டுள்ளதுஅதன்படி, தஞ்சாவூரில் அதிகபட்சமாக கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டிய காலியிடங்களின் எண்ணிக்கை 34 -ஆகவும், பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டியவை 27-ஆகவும் உள்ளன.

இதேபோன்று, விழுப்புரம், காஞ்சிபுரம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகளவுகாலியிடங்கள் உள்ளனகிராம உதவியாளர்களுக்கு வாய்ப்புகிராமப்புறங்களில் நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாளர்களாக பணியாற்றுவர்களே கிராம உதவியாளர்கள். அவர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பணிச் சலுகைகள் மிகவும் குறைவாகும்அவர்களில் குறிப்பிட்ட அளவினர், பதவி உயர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர்களாகும் வாய்ப்பு கிடைத்துள்ளதுமாவட்ட அளவிலேயே இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகளை பூர்த்தி செய்யும்படி வருவாய் நிர்வாக ஆணையரகம் கேட்டுக் கொண்டுள்ளது

9 comments:

  1. kurunai adipadaiyil velai endral eppadi
    yaraenum vilakavum

    ReplyDelete
  2. kurunai adipadaiyil velai endral eppadi
    yaraenum vilakavum

    ReplyDelete
    Replies
    1. Velail irukum pothu death ana arasu paniyalarkalin varisukaluku valangum velai than

      Delete
    2. appa padicha nangallam enna pandrathu

      Delete
    3. appa padicha nangallam enna pandrathu

      Delete
    4. Neenga mattum than padichurukinga, mathavanga elam padikalaiya, neenga enna nu vilakam ketinga, intha karunai wise velailum pala kudumpangal valuthu,

      Delete
    5. Neenga mattum than padichurukinga, mathavanga elam padikalaiya, neenga enna nu vilakam ketinga, intha karunai wise velailum pala kudumpangal valuthu,

      Delete
  3. Arasial punnaaku dog evano ippadi sattam potuvitan.oru village nirvagika evana vendumanalum podalama? Eppadi ooru urupudum.10th padichirundhal oru ooraiye nirvagikum paniya? Adhuvum 10th fail analthan vao assistant velai.avanunga 10 varusam velai partha avanungaluku vao promotion.oru velai 10th pass endral avanga pala poti exam ezhuthi kuttikaranam adipanga.

    ReplyDelete
  4. Arasial punnaaku dog evano ippadi sattam potuvitan.oru village nirvagika evana vendumanalum podalama? Eppadi ooru urupudum.10th padichirundhal oru ooraiye nirvagikum paniya? Adhuvum 10th fail analthan vao assistant velai.avanunga 10 varusam velai partha avanungaluku vao promotion.oru velai 10th pass endral avanga pala poti exam ezhuthi kuttikaranam adipanga.varisu endra adipadaiyil 10 lacs panam kodunga.avanga thaguthi erpa pozhacikittum.illa kalvi thaguthiyai uyarthu.first thalayeringaluku VAO promotion etha vachida tharinga.10th la fail na thalaiyeriyelai.avan 4 atta vachi pass analum promotion kodupeengala? Idhuku yaravadhu thadai case poduvanganu partha podamatagirangale.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி