இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 77வது நினைவு தினம் அனுசரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2018

இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 77வது நினைவு தினம் அனுசரிப்பு.


சேலம் ,மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம்,மண்ணூர் மலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று நோபல் பரிசு பெற்றவரும் பாரத நாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவருமான இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 77வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் முருகன்,ஆசிரியர்கள் வெங்கடாசலம், பால்குமார் மற்றும் மாணவர்கள் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். JRC ஆசிரியர் ஜோசப் ராஜ் அவர்கள் மாணவர்களுக்கு தேசிய கீதத்தை எப்படி பாடவேண்டும், 13வரிகளை கொண்ட தேசிய கீதத்தை 52 வினாடிகளில் பாடிவிட வேண்டும் ,பாடும் போது நேராக அசையாமல் நின்று பாடவேண்டும், மேலும் அவர் வங்க தேசம் நாட்டிற்கும் தேசிய கீதம் எழுதியுள்ளார்,அவர் எழுதிய கீதாஞ்சலி  நூலுக்கு உலகின் உயரிய விருதான நோபல் பரிசினை 1913 ம் ஆண்டு வழங்கப்பட்ட து போன்ற தகவல்களை  மாணவர்களுக்கு வழங்கினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி