Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

இன்று நண்பர்கள் தினம் - August First Sunday - நண்பர்கள் தின வரலாறு..!


ஒவ்வொரு தினம் கொண்டாடவும் ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது சம்பவமோ காரணமாக இருக்கும். நட்பு தினம் கொண்டாட ஏதேனும் காரணம் ஒன்று வேண்டுமா என்ன?
உலகத்தில் பிறந்த அனைவருக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது. எனவே எல்லோருமே கொண்டாடும் ஒரு தினம்தான் இந்த நட்பு தினம்.

நண்பர்கள் தின வரலாறு..!


இதற்கு முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்தது என்னவென்றால், அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு நட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து, அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

அன்று முதல் அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.நம் இலக்கியங்கள் சொல்லித் தந்த நட்பின் இலக்கணம்..!சங்க காலத்தில், பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலவர் பிசிராந்தையாரும், சோழ நாட்டு மன்னன் கோப்பெருஞ்சோழனும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே நட்பை வளர்த்து நண்பர்களாக வாழ்ந்த வரலாற்றை நாம் மறக்கமுடியுமா..?கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து மரணமெய்திய செய்தி கேட்டு, பிசிராந்தையாரும் தன் நண்பரின் பக்கத்திலேயே வடக்கிருந்து மரணமெய்திய நிகழ்ச்சியை போல் நட்பை உயர்வு செய்யும் வேறு நிகழ்ச்சியை சொல்ல முடியுமா..?அதே போல் சங்ககாலத்தில், வாழும் காலத்தை அதிகரிக்கச்செய்யும் நெல்லிக்கனியை தான் சாப்பிடாமல் தன் நண்பரான அவ்வைக்கு கொடுத்தானே அதியமான்... இதையும் நாம் மறக்கமுடியுமா..? அதேப்போல், ''நட்பு'' என்ற அதிகாரத்தில் பத்து குறள்களை தந்திருக்கிறாரே திருவள்ளுவன்... இதையும் நாம் மறக்கமுடியுமா...?

நட்பில் பலவகை அதுபோல் கொண்டாட்டமும் பல வகை..!நட்பு தினம் என்றதும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்று சரியாகச் சொல்லிவிடுவோம். நட்பு தினத்தை கொண்டாடுவதிலும் பல்வேறு வகைகளைப் பிரித்துள்ளனர். அதாவது தேசிய நட்பு தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்றும், மகளிர் நட்பு தினம் ஆகஸ்ட் 3வது ஞாயிறு என்றும், சர்வதேச நட்பு மாதம் என்பது பிப்ரவரி என்றும், பழைய மற்றும் புதிய நண்பர்களுக்கான வாரம் மே மாதத்தின் 3வது வாரம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் பரவியிருக்கும் நண்பர்கள், இந்த நட்பு தினத்தையும் கொண்டாடத் துவங்கிவிட்டனர். தற்போது பல்வேறு நாடுகளிலும் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

2 comments

 1. இன்று கைதான ஆசிரியர்களுக்கும் *அனைவருக்கும்* நண்பர்கள் தின ® வாழ்த்துக்கள் &
  வாழ்த்துக்கள்& வாழ்த்துக்கள்&&&

  ReplyDelete
 2. கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அமைச்சர் செங்கோட்டையின் வீட்டை முற்றுகையிட ஆசிரியர்கள் முயற்சி
  Sunday, 05 Aug, 7.46 am
  ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அமைச்சர் செங்கோட்டையின் வீட்டை முற்றுகையிட ஆசிரியர்கள் முயற்சி செய்துள்ளனர். தகுதி தேர்வெழுதியர்களுக்கு பணி ஆணை வழங்கவும், தகுதி தேர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி முற்றுகையிட முயன்ற 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தனியார் மண்டபத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives