BE - இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங் அவகாசம் நீட்டிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2018

BE - இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங் அவகாசம் நீட்டிப்பு!

இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில், விருப்ப பதிவு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு, நேற்று விடுமுறை அறிவித்ததால், இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங்தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.இதன்படி, மூன்றாம் சுற்று கவுன்சிலிங்கில், ஆன்லைனில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு, ஒப்புதல் தருவதற்கான அவகாசம், இன்று பகல், 12:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதி இட ஒதுக்கீடு உத்தரவை, இன்று மாலை, 5:00 மணிக்கு, ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். நான்காம் சுற்று மாணவர்களுக்கு, கவுன்சிலிங் கட்டணம் செலுத்தும் அவகாசம், இன்று பகல், 12:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நான்காம் சுற்றுவிருப்ப பதிவு, இன்று பிற்பகல், 2:00 மணிக்கு தான் துவங்கும். ஐந்தாம் சுற்றுக்கான கட்டணம் செலுத்தும் அவகாசம், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி