அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தொழிலதிபர்கள்,பழைய மாணவர்கள் உதவ அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2018

அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தொழிலதிபர்கள்,பழைய மாணவர்கள் உதவ அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்



கே.ஏ.செங்கோட்டையன்அரசுப் பள்ளிகளில் உள்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த அங்கு படித்த பழைய மாணவ, மாணவிகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களும் உதவி செய்ய முன்வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அனைவருக்கும் சிறந்த கல்வி யைத் தந்து, அதன்மூலம் அவர் களின் எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றுவதற்காக, முன்னாள் முதல் வர் ஜெயலலிதா 14 வகையான பொருட்களை விலையில்லாமல் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி னார். பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதன் காரண மாக, மற்ற மாநிலங்களும், மத்திய அரசும் நம் மாநிலத்துக்கு நற்சான்று வழங்கி வருகின்றன. இதற்கு மேலும் முத்தாய்ப்பாக, தமிழகத்திலும் உலகத்தின் பல்வேறுஇடங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த முன் னாள் மாணவர்களும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள தொழிலதிபர் களும் தங்கள் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும். இவர்களுடன்பொது மக்களும் கரம் கோர்த்து, தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அழைக்கிறேன்.

‘கல்லாதவர்களே இல்லாத மாநிலமாக தமிழகத்தை ஆக்க வேண்டும். பள்ளி வகுப்பறைகள் புனிதமாக இருக்க வேண்டும்3என்பதையே தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் இந்த அரசு, பள்ளிக் கல்வித் துறைக்காக மட்டும் இந்த ஆண்டு ரூ.27,205 கோடி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்துள்ளது. எவ்வளவுதான், அரசு நிதியை ஒதுக்கினாலும், ‘என் பள்ளி இது’ என்ற எண்ணத்தை தன் இதயத்தில் ஏந்திய நல்லோரின் துணையும், பள்ளிகளுக்கு மேலும் மெருகூட்ட வழிவகை செய்யும்.பள்ளிகளில் உள்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணைய வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை செய்துதரயாரும் தாங் களாக மனமுவந்து விரும்பினால், எவ்வித தாமதமும் இன்றி உடனடி யாக அனுமதி வழங்க வேண்டும் என்று நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கல்வியால்தான் அடுத்த தலை முறையினருக்கு சிறந்த சேவையைச் செய்ய முடியும். எனவே, அன்பு உள்ளமும் தர்ம சிந்தனையும் கொண்ட அனைவரும் தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று மீண்டும் அழைக்கிறேன்.அரசின் பணியோடு, தங்களின் பங்களிப்பும் இணையும்போது தான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும், வளம் பெறும். எனவே, அனைவரும் வாருங்கள்.. ஒன்று சேர்ந்து வளமிகு அரசுப் பள்ளி களுக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி