தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை கேரள நிவாரண நிதியாக தர முடிவு ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2018

தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை கேரள நிவாரண நிதியாக தர முடிவு !



கேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்.ஜி.ஓ.) சங்கம் முடிவு செய்துள்ளது. கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அணைகள் நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து வெள்ளப்பாதிப்பு அதிகரித்துள்ளது. உயிர் இழப்பும் அதிகரித்து வருகிறது.வீடு,உடமைகளை இழந்து உணவு, உடையின்றி மக்கள் தவிக்கிறார்கள். கேரளாவை புரட்டிப் போட்ட மழையால் சாலை, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.கேரள அரசுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டது. இந்தநிலையில் தமிழக அரசு ஊழியர்கள் சார்பாகவும் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளனர்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்.ஜி.ஓ.) சங்கம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-கேரள மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக துயருற்ற கேரள மக்களுக்கு உதவி செய்யும் வகையிலும் அவர்களது துயரத்தில் தமிழக அரசுஅலுவலர்களும், ஆசிரியர்களும் பங்கு கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொது மக்களில் ஒரு பகுதி என்ற நிலையிலும் நிவாரண நிதி வழங்க முடிவு செய்துள்ளோம்.எங்களது ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து நிவாரண நிதி வழங்க உரிய ஆணை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சரை அரசு அலுவலர் ஒன்றியம் கேட்டுக் கொள்கிறது.

இதற்கு முன்உதாரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் இதுபோன்று தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்

9 comments:

  1. DO U WANT KVS EXAM STUDY MATERIAL AND GUIDANCE.9600640918

    ReplyDelete
  2. Intha arasu ooliyar list la cm & ministers mla iruppangala...????

    ReplyDelete
  3. இந்த சங்கம் தான்
    ஜாக்டோ ஜியோ - கிராப் என்று பிளவுபட முக்கிய காரணம்...
    அரசுக்கு ஆதரவு.. வீண் விளம்பரம்

    ReplyDelete
  4. Seventh pay commissions 21 months arrears of our salary has not been provided till date.why we have to sacrifice one day salary? That too never reach the deceased properly. Loosu thanamana mudivugalai uruppadatha sanga nirvagigal edukka vendiyathillai.

    ReplyDelete
  5. யாரைக்கேட்டு
    முடிசெய்தீர்கள்
    சங்க தலைவரே

    அதிக சம்பள வாங்குபவர்ஙள்
    காெ டுங்கள்

    நாங்கள் கேரள மக்கள் மீண்டுவர பிராத்தனை செய்கி றாே ம்

    ஊதிய உயர்வு பெ ற்றுத்தர திராணி யில்லாத நீங்கள் காெ டுங்கள்

    அங்க அவன் முல்லை ப் பெ ரியாரு அ ணை யை எப்படியாவது
    அழித்துவிட வே ண் டுமெ ன
    நீதிமன்றம் பாே ய் நாடகமாடி ஜெ யித்தும் விட்டான் நீங்க என்னடான்னா
    உதவி செ
    ய்ய நெ னச்சா உங்க சம்பளத்தை முழுவதும் காெ டுங்கள்
    எங்க சம்பளத் தை எங்க கிட்ட
    சம்மதக் கடிதம் வாங்காமல் யாரும் பிடிக்கக் கூடாது

    ஒரு நாள் ஊதியம் எங்களுக்கு மிகபெ ரிய இழப்பு

    ReplyDelete
  6. Mr.Babu Rayappan you r correct. No one has the right to deduct our one day salary without our permission. "Sattiyil irunthal than agappaiyil varum" entra vasagathai yaral marakka mudium? Engal sattiyil irunthu agappaiyil eduthu kudukka enakkum ontrumillai...

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி