ஏடிஎம்களில் இரவில் இனிமேல் பணம் எடுக்க முடியாது? மத்திய அரசு அறிவிப்பு.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2018

ஏடிஎம்களில் இரவில் இனிமேல் பணம் எடுக்க முடியாது? மத்திய அரசு அறிவிப்பு.!



ஏடிஎம்களில் இரவு நேரங்களில் பணம் நிரப்பட வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் பணம் நிரப்பும் நிறுவனங்களுக்கு புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.


இந்நிலையில், இரவு நேரங்களில் பணம் நிரப்பாமல் போனால் மக்கள் பணம் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலா வாசிகளும், உள்ளூர் வாசிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என அச்சம் எழுந்துள்ளது.
 

ஏடிஎம்களின் மீது தாக்குதல்கள்:
வங்கி ஏடிஎம்களில் இரவு நேரங்களில் அதிக பணம் நிரப்பட்டு வருகிறது. இதைதெரிந்து கொண்ட கொள்யையர்கள் பணம் நிரப்பு கொண்டு வரும் வாகனங்களின் மீதும், இரவில் பாதுகாப்பு அற்று இருக்கும் ஏடிஎம்களின் மீதும், கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். முறைகேடாக ஏடிஎம்களில் மோசடிகளும் நடந்து வருகின்றது. இதை தடுக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 

மத்திய அரசு அறிவிப்பு:
கிராப்பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் மாலை 6 மணிவரையும், நகர் புறங்களில் இரவு 9 மணி வரையும், நக்சல் பாதிப்பு உள்ள பாகுதிகளில் மாலை 4 மணி வரை மட்டுமே பணம் நிரப்ப வேண்டும் என்று பணம் நிரப்பும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

கட்டாயம் இருக்க வேண்டும்:
பணம் நிரப்பும் வாகனங்களில் ஒரு ஓட்டுனர், இரண்டு ஆயுதம் தாங்கிய காவலர்கள், இரண்டு ஏடிஎம்அதிகாரிகள் சமந்தப்பட்டவர்கள் இருக்க வேண்டும். பணம் நிரப்படும் வாகனத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சிசிடிவி கேமரா:
பணம் நிரப்பும் வாகங்களில் 5 நாள் சேமிப்பு வசதி கொண்ட சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கேபினில் உட்புறம் வெளிப்புறம் சிசிடிவி கேமரா பொருத்தியிருக்க வேண்டும்.
 

2019 முதல் அமல்:
பணம் நிரப்பும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சரம் சுற்றறிக்கை வாயிலாக இந்த நிபந்தனையை தெரிவித்துள்ளது. இது 2019ம் ஆண்டு பிப்ரவரி முதல் அமலுக்கு வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொது மக்கள் பணம் கூட எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு மாற்று வழியை கையாள வேண்டும் என்று பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 comments:

  1. முதல்ல பணத்தை புடுங்குணிங்க இப்பதான் பணமே இல்லையே ...இனி திறந்திருந்தால் என்ன மூடுனா என்ன

    ReplyDelete
  2. பெரும்பாலான ஏடிஎம் ல பணமே இருக்கிறதில்லை. இதுல வருஷத்துக்கு ரூ180 ஏடிஎம் காக தெண்ட செலவு.
    இப்ப இதுவேற.....

    Clean India....

    ReplyDelete
  3. any time money எடுக்க முடியாதுனா பேர வேர மாத்தி வைக்கனுமே...!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி