திரு.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு பாராட்டு கவிதை - ஆசிரியர் திரு. கா.சந்திரசேகர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2018

திரு.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு பாராட்டு கவிதை - ஆசிரியர் திரு. கா.சந்திரசேகர்



_*திரு.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்*_

*கல்வித்துறையின்*
*கலங்கரை விளக்கம்*
*நீங்கள்!*

*புத்தகத்தில்*
*புதுமையைப்*
*புகுத்திய*
*புத்திசாலி*
*புண்ணியவான்*
*நீங்கள்!*

*வாசிப்பை*
*நேசிக்க வைத்த*
*மாசற்ற*
*மாணிக்கம்*
*நீங்கள்!*

*ஆசிரியர்களை*
*அரவணைத்து*
*அழகாய்*
*வழிநடத்திய*
*அன்புள்ளம்*
*அமைந்தவர்*
*நீங்கள்!*

*மாணவர்களின்*
*மனங்களிலும்*
*சிம்மாசனமிட்ட*
*மாண்புடையவர்*
*நீங்கள்!*

*கல்வித்துறையில்*
*கால்பதித்து*
*காலமெல்லாம்*
*உங்கள் பெயரை*
*உச்சரிக்க*
*வைத்ததைப் போல...*

*தொல்லியல்*
*துறையினிலும்*
*தோண்டல்கள்*
*பலசெய்து*
*கல்வெட்டின்*
*எழுத்தினைப் போல்*
*தங்கள் பெயர்*
*தரணியெங்கும்*
*நிலைத்திருக்கச்*
*செய்திடுங்கள்!*

*உதயமாகும் சந்திரனாக*
*உங்களின்*
*அன்பொளி வீசி*
*வல்லமை பெறட்டும்*
*தொல்லியல் துறை!*

💐💐🙏🙏🙏💐💐
*என்றும் அன்புடன்....*
_*கா.சந்திரசேகர்*_,
_*தமிழாசிரியர்*_,
_*வடமதுரை*_,
_*திண்டுக்கல் மாவட்டம்*_.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி