பள்ளியிலேயே மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவு: தமிழக அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2018

பள்ளியிலேயே மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவு: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக 2011ம் ஆண்டு முதல் நேரடியாகவேலைவாய்ப்பு இணையதளத்தில்  (https://tnvelaivaaippu.gov.in) பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தற்போது 2018ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் வருகிற 16ம் தேதி வழங்கப்பட உள்ளதை அடுத்து 16.8.2018 முதல்30.8.2018 வரை 15 நாட்களுக்கு ஒரே  பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி  கல்வித்துறையுடன்இணைந்து மேற்கொள்ள உள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்,

மெட்ரிக் பள்ளிகள்மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த  வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம்.மேலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு  அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம்.ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம்.

4 comments:

  1. பதிவு பன்னா மட்டும் வேலையாடா கொடுக்க போறீங்க?

    ReplyDelete
    Replies
    1. நீங்க கொடுக்கற வேலை என்னனா, 3 வருடங்களுக்கு ஓரு முறை ரினிவல் பன்னனும் அதானடா

      Delete
  2. ethukkuda oro pathivu othila oru reneval.useless govt .just oru munnurimai kooda kidayathu seniority kood illai thooooooo.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி