கல்வித் துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தரமாக்க ஆலோசனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2018

கல்வித் துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தரமாக்க ஆலோசனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கல்வித்துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் திறன் மேம்பாடு மற்றும் வாழ்வியில் நெறிமுறை பயிற்சி பட்டறை நேற்று நடந்தது.

இதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் பேசியதாவது:

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மைய நூலகங்களில், ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்க உள்ளது. வரும் கல்வியாண்டில் 30 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.  இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் அவர் அளித்த பேட்டியில், ``பட்டய கணக்காளர்கள் ் அதிகளவில் தேவைப்படுவதால், அந்த படிப்பை ஊக்குவிக்கும் வகையில், பிளஸ்-2 வணிகவியல் படிக்கும் மாணவர்களில், சிஏ நுழைவுத் தேர்வுக்காக வரும் ஆண்டில்  25 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பட்டய கணக்காளர்கள் எனப்படும் தணிக்கையாளர்கள் தேர்வுக்காக அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்து தேர்ச்சி பெறும் மாணவர்கள், நடப்பு  ஆண்டிலேயே தேர்வு செய்து 10 நாட்கள்  பயிற்சி அளிக்கப்படும்.

தமிழக கல்வித்துறையில்பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிப்பது குறித்து பணியாளர் நல துறையுடன் அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்து விரைவில் நல்ல  அறிவிப்பு வெளியாகும்’’ என்று கூறினார்.

13 comments:

  1. இதில் பகுதிநேர ஆசிரியர்கள் இடம்பெறுவார்களா......

    ReplyDelete
  2. apo TET TRB ku padichuttu katthuttu irukvanganga enga porathu

    ReplyDelete
  3. Part time teacher unda please tell me

    ReplyDelete
  4. 2018 tet notification will be soon(august)

    ReplyDelete
  5. part time teachers ithil iruntha sollungal

    ReplyDelete
  6. part time teachers kuda ithilseruma

    ReplyDelete
  7. Part time teachers nambikkai athigam vaikkathirgal nadanthal nallathutan friends. Wait and see.

    ReplyDelete
  8. Dear friends ..
    Trb exam varum.
    So study well

    ReplyDelete
  9. Tet compatative exam syllabus - pg major syllabus same????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி