கேரளா வெள்ள நிவாரண நிதி ! அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஆசிரியர்களும் உதவி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2018

கேரளா வெள்ள நிவாரண நிதி ! அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஆசிரியர்களும் உதவி



கேரளா வெள்ள நிவாரண நிதி ! கரூர் அருகே அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களும் சேர்த்து கொடுத்த நிவாரணபொருட்கள் கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறுகாணாத வெள்ள பேருக்கு ஏற்பட்டு லட்ச கணக்கான மக்கள் தண்ணீர் உணவு இன்றி இன்றும் அவதியுற்று வருகின்றனர் .சமூக நல அமைப்புகள் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை தமிழகத்தில் இருந்து அனுப்பு வைத்து வருகின்றனர் . இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்தில்உள்ள தொட்டியபட்டி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி சார்பில் பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து கேரளா வெள்ள நிவாரண பொருட்களை திரட்டி அனுப்பிவைத்தனர் .

இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கோ.மூர்த்தி கூறுகையில் : பள்ளி மாணவர்கள் மத்தியில் மனிதநேய பண்புகளை வளர்க்க கேரளா வெள்ள நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை அனுப்ப முடிவு செய்த்து இப்பகுதி பொதுமக்களிடம் நிதி திரட்டி பள்ளியின் சார்பாகவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களால் ஆனா சிறு உதவியை செய்கிறோம் . கேரளாவில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுஉள்ளதாக செய்திகளை அறிந்து இங்கு படிக்கும் சில மாணவர்கள் அங்கு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வாங்கி கொடுத்து உள்ளனர் .இதனை கேரளா மக்கள் ஏற்று கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்.

பேட்டி : கோ.மூர்த்தி - பள்ளி தலைமை ஆசிரியர் - தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி