அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிப்பதில் சிக்கல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2018

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிப்பதில் சிக்கல்!

அரசு பள்ளிகளில், 3,700 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களை நடத்தி முடிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில், 2,500க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அதில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பாடவாரியாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இரு ஆண்டுகளாக, முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. கடந்த மாதம், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக, 1,000க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு பெற்றனர். 95 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. அதில், 900 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. இதனால், அரசு பள்ளிகளில், 3,700க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.


இதுகுறித்து, அரசு முதுகலை ஆசிரியர்கள் கூறியதாவது: பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தை பொறுத்தவரை, அனைத்து வேலைநாட்களில் பாடம் நடத்தினால் கூட, முழுமையாக முடிப்பது சிரமம். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதால், ஆசிரியர்களின் வேலைப்பளு இரு மடங்காக மாறியுள்ளது. இதில், காலிப்பணியிடங்களால் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கல்வியாண்டு தொடங்கி, மூன்று மாதங்களான நிலையில், இன்னும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. உடனடியாக, அவற்றை நிரப்பாவிட்டால், வரும் பொதுத்தேர்வில், தேர்ச்சி விகிதத்தில் கடும் பாதிப்பு ஏற்படும். அதேபோல், முதுகலை ஆசிரியர்களுக்கு, கடந்த ஜூனில் நடந்த இடமாறுதல் கலந்தாய்வில், 20 மாவட்ட ஆசிரியர்களுக்கு, வேறு மாவட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

தற்போது, காலியிடங்கள் அதிகமாகவுள்ள நிலையில், இரண்டாம் கட்ட மாறுதல் நடத்த வேண்டும். ஏனெனில், பதவி உயர்வு, புது நியமனத்துக்கு முன், ஏற்கனவே வேறு மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இதனால், போதிய சவுகரியமின்றி, விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

40 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் 50 சதவிகிதம் promotion ஆகவும் 50 சதவிகிதம் தேர்வினை நடத்தியும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.ஆனால் பட்டதாரி பணியிடங்களில் அது மாதிரியான நடைமுறையைப் பின்பற்றப்படுவதில்லை ஏன்?..
      என்னதான்டா சட்டம் உங்க சட்டம் போங்கடா நீங்களும் உங்க உதவாத சட்டமும்..பணி நிரவல்ன்ற பேர்ல எங்க வாழ்க்கையோட ஏன்டா விளையாடுறிங்க....

      Delete
  2. When will the notification will come

    ReplyDelete
  3. விரைவில் வருவதற்கான சூழல் உள்ளது

    ReplyDelete
  4. MLA ,MP.pass pannirukangale avargale nadatha sollunga..,. Palli kalvi minister palli othiki padam nadathi result kamika sollunga.....

    ReplyDelete
  5. Pgtrbaugest month end Calfervaruma?

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Do u want kvs exam guidance and studymaterial. please contact 9600640918

    ReplyDelete
  8. Friends pg Trb undu nala padinga

    ReplyDelete
  9. Commerce major friends nala padinga. Matra major friendsum nala padinga

    ReplyDelete
  10. Ipdiyae tha sollittu irukinga aana exam vaikkara mathri theriyala

    ReplyDelete
  11. Frds any one tell mathematics expected vacancy

    ReplyDelete
  12. இந்த ஆண்டு PG TRB வருமா

    ReplyDelete
    Replies
    1. கண்டிபாக வரும் தேர்வுக்கு தயாராகுங்கள்

      Delete
    2. கண்டிபாக வரும் தேர்வுக்கு தயாராகுங்கள்

      Delete
    3. கண்டிபாக வரும் தேர்வுக்கு தயாராகுங்கள்

      Delete
  13. Pg trb nichayamaka August or September endil call for aaga chance undu.because, last two pg trb ethupol than nadanthathu.

    ReplyDelete
  14. PG physics பொருத்தவரை problems அதிகம் பார்க்கவும்

    ReplyDelete
  15. மாணவர்களின் நலன் கருதி PG முதுகலை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

    ReplyDelete
  16. மாணவர்களின் நலன் கருதி 2015 மற்றும் 2017 ம் ஆண்டுகளில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தேர்வுகளில் நல்ல மதிப்பென் எடுத்த ஆசிரியர்களை நிரப்பவும்.

    ReplyDelete
    Replies
    1. இதற்கு வாய்ப்புகள் இல்லை

      Delete
  17. Where are you couching centre in pg physical education please inform friends

    ReplyDelete
  18. I want commerce pg study material commerce Tamil medium study materials I pay the money my no 9072349100

    ReplyDelete
  19. I also need Pg trb English material

    ReplyDelete
  20. I also need Pg trb English material and questions papers

    ReplyDelete
  21. Tamil PG Madurai- sai Coaching center materials kedaikuma? Friends

    ReplyDelete
  22. Sir pg physical education madurai sai coaching center materials kedaikuma?

    ReplyDelete
  23. exam varum but exam mudingu result varum apram post podamatanga case poduvanga 12 lak

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி