பள்ளி மாணவருக்கு கல்வி உபகரணம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2018

பள்ளி மாணவருக்கு கல்வி உபகரணம்

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவியருக்கு, இலவச புத்தகம், கணித பாட உபகரணம், கலர்பென்சில், புத்தகப்பை, காலணி இலவசமாக வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு, மாணவர் வருகை அடிப்படையில், அரசின் கல்விஉபகரண பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 1ம் வகுப்பு துவங்கி, பிளஸ் 2 வரை படிக்கும்,72 லட்சத்து, 55 ஆயிரம் மாணவ - மாணவி யருக்கு புத்தகப்பை; 1 - 10ம் வகுப்பு படிக்கும், 58 லட்சம் பேருக்கு காலணி; 3 - 5ம் வகுப்பு படிக்கும், 15 லட்சத்து, 15 ஆயிரம் பேருக்கு, கலர் பென்சில்; 6 - 10 வரை படிக்கும், 16 லட்சத்து, 16 ஆயிரம் மாணவ - மாணவியருக்கு, ஜியாமெட்ரி பாக்ஸ் வழங்க, கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது.கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'அரசு, உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவி யருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் பணி, அடுத்த இரு மாதங்களில் துவங்கும்' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி