குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை கொண்டு எம்.எஸ்சி.காலியிடங்களை நிரப்ப அவசியம் இல்லை- உயர்நீதிமன்றம் அதிரடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2018

குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை கொண்டு எம்.எஸ்சி.காலியிடங்களை நிரப்ப அவசியம் இல்லை- உயர்நீதிமன்றம் அதிரடி

ஐதராபாத்தை சேர்ந்தவர் தாண்டேக் ரோகிணி என்பவர்சென்னை பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்சி. விலங்கியல் படிப்புக்கு விண்ணப்பம் செய்தார்.
மதிப்பெண் குறைவாக பெற்றிருந்ததால் அவருக்கு இடம் வழங்க கல்லூரி நிர்வாகம் மறுத்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தாண்டேக் ரோகிணி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல், ‘இளங்கலை படிப்பில் 71 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே, முதுகலை படிப்பில் இடம்வழங்க முடியும். மனுதாரர் 61 சதவீத மதிப்பெண் மட்டுமே பெற்றிருப்பதால் அவருக்கு இடம் வழங்க முடியாது’ என்று வாதிட்டார்.அதற்கு மனுதாரர் வக்கீல், ‘கல்லூரியில் எம்.எஸ்சி. விலங்கியல் படிப்பில் பல இடங்கள் காலியாக உள்ளன. எனவே மனுதாரருக்கு இடம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘எம்.எஸ்சி. படிப்பில் பல இடங்கள் காலியாக இருக்கிறது என்பதற்காக குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை கொண்டு நிரப்பவேண்டும் என்ற அவசியம் இல்லை. இதை அனுமதித்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

3 comments:

  1. 61 % ku enna korayam, first class thana, as per ugc norms evlo percentage venum?

    ReplyDelete
  2. Those who scores poor marks ,they are becoming as great people in the world,we have many more examples ,the great law maker Dr.B.R.Ambedkaris an example

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி