இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில்தமிழக கல்வித்துறை செயல்பாட்டு வருகிறது - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2018

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில்தமிழக கல்வித்துறை செயல்பாட்டு வருகிறது - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்!



அரசு பள்ளி ஆசிரியர்கள் சிறந்தவர்களாக இருப்பதால்  அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் குடியரசுத்தலைவர் ,அரசு அதிகாரிகள் என பல்வேறு நிலைக்கு வந்துள்ளனர் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்..

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கல்விமாவட்டத் தொடக்க விழா, விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளுக்கு புரவலர் நிதி வழங்கும் விழா,பத்நாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீத தேரச்சியை பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு விழா,தேர்சியை பெற்றுத் தந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை இலுப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது...மாவட்ட ஆட்சித் தலைவர் சு.கணேஷ் வரவேற்றுப் பேசினார்....மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் புரவலர் நிதி வழங்கி பேசியதாவது:புதுக்கோட்டை மாவட்டம் ஓர் கல்விக்கோட்டை என்றே சொல்லலாம்..காரணம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் செவ்வனே சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதே ஆகும்..இங்குள்ள  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்,மாவட்டக்கல்வி அலுவலர்கள்,வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆகியோர்கள் சீரிய முறையில் பணியாற்றி வருகிறார்கள்...புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாக இருந்த கல்வி மாவட்டம் தற்பொழுது மூன்றாக இலுப்பூர்கல்வி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது...கிராம்ப்புற மாணவர்கள் தொலைதூரம் சென்று கற்கும் பொழுது ஏற்படும் சிரமத்தை போக்க இந்தாண்டு நான்கு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாகவும் ,மூன்றுஉயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம்உயர்த்தப்பட்டுள்ளது.இந்தாண்டு பெற்றுள்ள நூறு சதவீத தேர்ச்சியை விட வரும் கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் நூறு சதவீத தேர்ச்சியினை எட்ட வேண்டும்.இந்த நல்லாட்சியில் இந்தியாவில் சுறுசுறுப்பாக  பி.டி.உஷாவைப் போல் வேகமாக ஓடிக் பொண்டிருப்பவர் நமது கல்வி அமைச்சர் தான் .நான் கூட அவரை போல ஓட நினைத்தாலும் வேகத்திலே சுறுசுறுப்பிலேஎனக்கு முன்னோடி அவர் தான்..அவர் தான் ஓடுவது மட்டுமல்லாமல் தன் துறையையும் வேகமாக ஓட வைப்பவர்..தாம் பொறுப்பு ஏற்றது முதல் இந்த பள்ளிக் கல்வித் துறையை சீர்மிகு துறையாக மாற்றியுள்ளார்.கனவு ஆசிரியர் விருது,புதுமைப் பள்ளி விருது பெற்ற ஆசிரியர்கள்  பாராட்டுச் சான்றிதழை என்னிடம்   காண்பிக்கும் பொழுது என்மனம் மகிழ்வாக உள்ளது.மேலும் கல்வித்துறையில் ஆன்லைன் கலந்தாய்வு,கனவு ஆசிரியர் விருது,தேர்வு முறையில் மாற்றம் ,ரேங்க் முறையில் மாற்றம் என பல புரட்சிகளை வெகுறைந்த நாட்களில் கொண்டு வந்தவர் பள்ளிக்கலவித் துறை அமைச்சர்..கழிவு நீர் குட்டையில் கிடந்த குழந்தையையும் அரசு மருத்துமனையில் சேர்த்து தாய்ப்பால் வழங்கும் ஒரே அரசு நம் அரசு தான்.மேலும் கூடுதல் கட்டிடம்,பள்ளிகள் தரம் உயர்வு பற்றி எக்கோரிக்கைகள் கேட்டாலும் உடனே செய்து கொடுப்பவர் நம் அமைச்சர் .மாணவ,மாணவிகளை பயிற்றுவிப்பது ரொம்ப கடினம் ,அதிலும் நூறுசதவீத தேர்ச்சி பெற வைப்பது மிகவும்  கடினமான காரியம்..பெரும்பாலும் நான் புதுக்கோட்டை மாவட்ட விழாக்களில் கலந்து கொள்ளும் பொழுது  மாணவர்களிடம் சொல்லும் வார்த்தை தம்பி நீ நன்றாக படிக்கனும்.புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் டாக்டராக  படிக்கனும் என்பேன்..மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது..ஆசிரியர்களின் நாவில் வரும் சொற்களில் தான் உள்ளது...மேலும் தான் தனது சொந்த நிதியை 310 பள்ளிக்கு பள்ளிக்கு ஆயிரம் வீதம் புரவலர் நிதியாக வழங்கியுள்ளேன்..மேலும் மாணவர்களுக்கு பயிற்சி கையேடு வழங்க உள்ளேன்..ஆசிரியர்களுக்கு இந்த அரசு என்றும் துணை நிற்கும் என்றார்.

விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிப்  பேசியதாவது:

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில்தமிழக கல்வித்துறை செயல்பாட்டு வருகிறது.. மாணவர்கள்சிறப்பாக கல்வி கற்கும் வகையில் 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது..பள்ளி மாணவர்களுக்கு மடிகணினி,மிதிவண்டி வழங்கிய பெருமை நம் தமிழகத்திற்கே உண்டு..ஆசிரியர்கள் கலந்தாய்வு வெளிப்படையாகவே நடத்தப்பட்டது..ஒரு சில  மாவட்ட ஆசிரியர்கள் ஏன் கன்னியாகுமரி,தூத்துக்குடி செல்ல முடியவில்லை என நினைக்கிறார்கள்..அங்கே ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இங்குள்ளவர்கள் அங்கு செல்ல முடியவில்லை..ஒரு காலத்தில் ஆசிரியர்களிடம்  பெற்றோர்கள் மாணவர்களை கண்டிக்க கூறுவார்கள் ஆனால் இன்று அப்படி இல்லை.இருந்தாலும் கிராம்ப் புறங்களில் இருந்து வரும் ஏழைக் குழந்தைகளை கருத்தில் கொண்டு ஆசிரிநர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்..அரசு பள்ளி ஆசிரியர்கள் மதிப்பெண் அடிப்படையில் தகுதி தேர்வின்அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்..அரசுப்பள்ளியில் படித்தவர்களே குடியரசுத் தலைவர் ,அரசு உயரதிகாரிகள் என பல்வேறு நிலைகளில் உள்ளனர்..இது வரை நான்கு ஆண்டுகள்  உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் நிரப்ப படாமல் இருந்தது..இந்த ஆண்டு ஒரே நாளில். தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி வரலாற்று சாதனை படைத்துள்ளோம்.1 முதல் 8 வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு சீருடைகளில் மாற்றம் கொண்டு வரப்படும்... 11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மடிகணினி,சைக்கிள் வழங்கப்படும்..மூவாயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும்.. இனிவரும் காலங்களில்  மொழிப்பாடங்களில் இரண்டு தேர்வுகள் ஒரு தேர்வாக மாற்றப்பட்டுள்ளது...

ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகிறது..எனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பாகமுறையில் கல்வி கற்பித்து எதிர்கால மாணவர்களை சிறந்த மாணவர்களாக உருவாக்க வேண்டும் என்றார்.

விழாவில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ் திட்டவிளக்கவுரையாற்றினார்..விழாவில் மார்ச்/ ஏப்ரல் 2018 ல் நடைபெற்ற பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 100%தேர்ச்சி பெற்ற பள்ளிகள்,100% தேர்ச்சி பெற்றுத் தந்த ஆசிரியர்கள்,தங்கள் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்றுத் தந்த ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டில் மாநில  மற்றும் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுத் தந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றுகளும் கேடயமும் வழங்கப்பட்டது..

விழாவில் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் சுகன்யா,முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி,கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம்  இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியின்  பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முனைவர் இரா.சின்னத்தம்பி,மதியநல்லூர்  அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.ராமசாமி, இலுப்பூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் குரு.ராஜமன்னார்,ஆத்ம குழுத் தலைவர் ப.சாம்பசிவம்,புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் சா.சத்தியமூர்த்தி,அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கு.திராவிடச் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் க.குணசேகரன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்,அரசு அலுவலர்கள்   உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்...முடிவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா நன்றி கூறினார்..

17 comments:

  1. kkk
    Wat abt computer science teacher???

    ReplyDelete
  2. Polytechnic exam scam, pg TRB scam, special teachers scam, mk university இதையெல்லாம் பார்த்து 'கலவி'த்துறை உலக அளவில் ஆச்சர்யப்பட வைக்காதா பின்ன?

    ReplyDelete
  3. ஆசிரியர் பணி இல்லாமல் எப்படி கல்வித்துறை சிறந்து விளங்கும்?

    ReplyDelete
  4. ஆசிரியர் பணி இல்லாமல் எப்படி கல்வித்துறை சிறந்து விளங்கும்?

    ReplyDelete
  5. இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில்தமிழக கல்வித்துறை செயல்பாட்டு வருகிறது - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன். அவர் மட்டுமே பெருமை கொள்கிறார்.தினமும் ஏதேனும் தேவையில்லாத தகவல் ஆசிரியர் நிலையை புரிந்து கொள்ள தெரியாத படிக்காத அமைச்சரே....

    ReplyDelete
  6. இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில்தமிழக கல்வித்துறை செயல்பாட்டு வருகிறது - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன். அவர் மட்டுமே பெருமை கொள்கிறார்.தினமும் ஏதேனும் தேவையில்லாத தகவல் ஆசிரியர் நிலையை புரிந்து கொள்ள தெரியாத படிக்காத அமைச்சரே....

    ReplyDelete
  7. appadi evaral mattum eppadi pesa mudiuthu ????!!!!????!!!!!

    ReplyDelete
  8. முதல்ல எங்களுக்கு ஒரு வேலை தாங்க ஐயா இல்லை என்றால் நாய் கூட திரும்பி பார்க்காது.

    ReplyDelete
  9. Yunnuma indha ooru nambala nambudhu

    ReplyDelete
  10. Ha ha ha...
    உலகம் திரும்பி பார்க்க வேண்டாம்....தமிழ்நாடு மக்களை
    திரும்பி பார்க்க வைத்தால் போதும்..
    கூறைஏறி கோழி பிடிக்க முடியாதவன்
    பட்டினம் போன கதையாருக்கு....

    ReplyDelete
  11. Senkottaiya tharpperumai pesathata thevidiya magane

    ReplyDelete
  12. Dai unga atchi pona daan engaluku velai.seekiram kalai num kadavule

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி