மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2018

மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறது


பள்ளிக்கல்வி விளையாட்டு துறை சார்பில் அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த போட்டியில் முள்வாய் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.போட்டிகள் நடந்தபோது, 2 ஆசிரியைகள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக மாணவிகளை குடை பிடிக்க வைத்தனர். போட்டி முடியும் வரை மாணவிகள் நின்றபடி ஆசிரியைகளுக்கு குடை பிடித்தனர்.ஆசிரியைகளுக்கு மாணவிகள் குடை பிடித்த போட்டோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக, விசாரணை நடத்த அரக்கோணம் மாவட்ட கல்வி அதிகாரி குணசேகரனுக்கு, முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உத்தரவிட்டார்.விசாரணையில், மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள், அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் பணிபுரிவது தெரியவந்தது. அந்த பள்ளிகளின் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, வேலூர் நேதாஜி மைதானத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது.அப்போது, வெயில் கொளுத்தியது. போட்டியில் நடுவராக இருந்த ஆசிரியை மாணவிகளை தனக்கு குடை பிடிக்க வைத்தார். இது, பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.அரக்கோணத்தையடுத்து வேலூரிலும் ஆசிரியைகள் மாணவிகளை குடைபிடிக்க வைத்த சம்பவம் சர்ச்சையாக வெடித்தது.

சமூக வலை தளங்களில் கல்வித்துறைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.இதனால் கல்வித்துறையில் சலசலப்பு ஏற்பட்டது.இதையடுத்து, அரக்கோணம் மற்றும் வேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்து சர்ச்சையில் சிக்கிய ஆசிரியைகள் மீது உடனடியாக நடவடிக்கைஎடுக்க சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

20 comments:

  1. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. முட்டாள்களே அப்பா or அம்மா மகனுககுள்ள உறவு போலத்தான் இதுவும். தொட்டதெல்லாம் குற்றம் என்றால் எப்படி?

    ReplyDelete
    Replies
    1. அறிவாளியே அதற்கு வெயிலில் நின்று உன் பிள்ளையை குடை பிடிக்க சொல்வாயா?

      Delete
    2. Venkat, Haa haa haa , sabboss

      Delete
    3. 1லட்சம் சம்பளம் வாங்கிட்டு பிள்ளைகள் உங்களுக்கு குடை பிடிக்கனுமா? உன் குழந்தை படிக்கிற தனியார் பள்ளில செய்தா ஏற்றுக் கொள்வாயா?

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. ஐயா நாங்க கூட மாணவர்கள் தப்பு பண்ண தண்டனை குடுக்கனும்னு நெனைக்கிற ஆளுங்க தான், ஆனா அதுக்காக வெய்யில்ல கொடை பிடிக்கனுனு எதுக்கு சொல்லுரிங்க, உங்க புள்ளைங்கள அப்படி நிக்க சொன்ன விடுவிங்களா? இல்ல ஒரு பணக்கார வீட்டு பையன அப்படி நிக்க விடுவிங்களா? இந்த மாதிரி விஷயத்துக்கு ஏழை பசங்கள யூஸ் பண்ணிக்குவிங்க, மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பணிவிடை செய்யலாம், ஆனா கொடை பிடிக்கிறது, எடுபிடி வேலை பாக்குறது, கக்கூஸ் கழுவுறது எல்லாம் பண்ண கூடாது, அப்படி வெயில்ல வேலை செய்ய முடியலேன்னா எதுக்கு வேலைக்கு வரணும், ரிசைன் பண்ணிட்டு போங்க, உங்க சம்பளத்துல பாதி குடுத்தா கூட வேலை செய்ய மக்கள் நெறைய பேரு காத்துட்டு இருக்காங்க,

      Delete
    6. மிகவும் ௨ண்மை

      Delete
  3. விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக்கொண்டோ அல்லது நடந்துகொண்டோ தான் இருப்பார்கள் எனவே வெயிலின் தாக்கம் அதிகமாக மாணவர்களுக்கு தெரியாது.குறுவட்டபோட்டி என்பதால் பல பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வந்திருப்பார்கள் அவர்கள் ஒரு சில போட்டிகளில் கலந்து கொண்டு வெளியே சென்று ஓய்வெடுக்த்துக்கொள்வார்கள்.ஆனால் நடுவராக இருக்கும் ஆசிரியர் அனைத்து போட்டிகளையும் கண்காணித்து மதிப்பெண் வழங்கவேண்டும்.அவ்வாறு ஒரே இடத்தில் நீண்ட நேரம் வெயிலில் நிற்க்கவோ உட்காரவோ யாராலும் முடியாது.அவ்வாறு சில தவிர்க்க முடியாத இடங்களில் மாணவர்கள் தாங்களாகவே கூட ஆசிரியர்களுக்கு இவ்வாறு செய்வதையெல்லாம் பெரிய குற்றமாகக்கருதவேண்டாம் ஏனெனில் சில ஆசிரியர்களுக்கு என்ன உடல் உபாதைகள் இருந்தாலும் மாணவர்களை விளையாட்டு வீரர்களாக ஆக்க மைதானத்துக்கு அழைத்து செல்கிறார்கள்.எனவே சில தவிர்க்க முடியாத காரணங்களால் இதுபோன்ற ஒரு சில நிகழ்வுகள் நடப்பதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  4. மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  5. அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  6. Very few teachers like tat only...they have to change.and the teachers need more conscious..

    ReplyDelete
  7. Very few teachers like tat only...they have to change.and the teachers need more conscious..

    ReplyDelete
  8. She should not have done like this. But at the same time maintain some courtesy in language.This is for everyone....

    ReplyDelete
  9. Murkalathil guruvukku sisyargal evalavu thondu seithargal ethilellam kutram kandupidikka kuduthu.

    ReplyDelete
  10. Do not find fault with every act of a teacher. Do consider them as human being just like you and me.

    ReplyDelete
    Replies
    1. its not finding fault, we are also teachers and we are against the teachers who forced the students to do so, even if the child done this by her own the teacher should not have allowed her to hold the umbrella. this is the example for how the students are misused,

      Delete
  11. Do not find fault with every act of a teacher. Do consider them as human being just like you and me.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி