சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் : பொதுமக்களுக்கு ஆதார் ஆணையம் எச்சரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2018

சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் : பொதுமக்களுக்கு ஆதார் ஆணையம் எச்சரிக்கை!

சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் என்று பொதுமக்களை யுஐடிஏஐ கேட்டுக் கொண்டுள்ளது.
டிராய் எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா, தனது ஆதார் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, அதன்மூலம் தனக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமா என சவால் விடுத்தார்.

இதன் பின்னர் சில மணி நேரங்களில், சர்மாவின் ஆதார் எண்ணைக் கொண்டு அவரின் மொபைல் எண், மாற்று மொபைல் எண், முகவரி, இமெயில் முகவரி, பிறந்த தேதி, பான் எண், பிறந்த மாநிலம், தற்போது வசிக்கும் வீட்டின் முகவரி உள்ளிட்ட தகவல்களை , ஆன்டர்சன் என்ற ஹேக்கர் வெளியிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டது. இந்நிலையில் ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இணையதளம் உள்ளிட்ட பொதுவெளிகளில் ஆதார் எண்களை பொதுமக்கள் வெளியிட வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி