சித்தா படிப்பு, 'அட்மிஷன்' அடுத்த வாரம் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2018

சித்தா படிப்பு, 'அட்மிஷன்' அடுத்த வாரம் விண்ணப்பம்

'சித்தா மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், அடுத்த வாரம் முதல், அரசு சித்தா மருத்துவ கல்லுாரிகளில் வினியோகிக்கப்படும்'என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், ஆறு அரசு சித்தா மருத்துவ கல்லுாரிகளில், 390 இடங்கள் உள்ளன. அதேபோல, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,350 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான கவுன்சிலிங், 'நீட்' நுழைவுத் தேர்வுஅடிப்படையில் நடைபெறுவதாக இருந்தது. பின், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.கடந்த, 2017ல் மாணவர் சேர்க்கைக்கு ஆக., 2ல், விண்ணப்பம் வினியோகம் துவங்கியது. நடப்பாண்டில், இதுவரை, விண்ணப்பம் வினியோகிக்கப்படவில்லை. சித்தா மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், பிளஸ் 2 அடிப்படையில் நடைபெறுவதால், 'அலோபதி' மருத்துவ படிப்பில், இடம் கிடைக்காத மாணவர்கள், சித்தா படிப்பிற்கு விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பம் வினியோகம், எப்போது துவங்கும் என, மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறுகையில், 'சித்தா மருத்துவ படிப்புகளுக்கான, தகவல்குறிப்பேடு மற்றும் விண்ணப்பம் வினியோகம் அச்சிடும் பணிகள் முடிந்துள்ளன. அடுத்த வாரம் துவக்கத்தில், சித்தா மருத்துவ கல்லுாரிகளில், விண்ணப்பம் வினியோகம் துவங்கும்' என்றனர்.

1 comment:

  1. The news published date is not known here, so Next week means, we not able to understand. So please provide the news with the date

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி