ஆன்லைனில் நீட் தேர்வு - அறிவிப்பை வாபஸ் பெற்றது மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2018

ஆன்லைனில் நீட் தேர்வு - அறிவிப்பை வாபஸ் பெற்றது மத்திய அரசு

ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வாபஸ் பெற்றுள்ளது.

நாடுமுழுவதும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

அதேசமயம் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வானது ஆன்லைன் முறையில் நடைபெறும் என்றும், ஆண்டுக்கு இருமுறை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. இதற்கும் பரவலாக எதிர்ப்புகள் எழுந்தது.

இந்நிலையில் ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை தற்பொழுது  வாபஸ் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பும், ஆண்டுக்கு இருமுறை தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பும் திரும்ப பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி