தலைமை ஆசிரியர் பணியிடங்கள் வெளிப்படையாக நிரப்பப்படுகிறது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2018

தலைமை ஆசிரியர் பணியிடங்கள் வெளிப்படையாக நிரப்பப்படுகிறது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


தலைமை ஆசிரியர் பணியிடங்கள் வெளிப்படையாக நிரப்பப்படுகிறது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபி குள்ளம்பாளையத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.

அரசு அதில் தனிக்கவனம் செலுத்தியதோடு, அது சம்பந்தப்பட்ட வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து விட்டது.இதனால் தற்போது தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் வெளிப்படையாக நிரப்பப்பட்டு வருகிறது. தங்களது குழந்தைகளை ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோர்களிடம் அதிகமாக உள்ளது.

தற்போது அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில்50 சதவீதம் வரை ஆங்கில வழியில் மாணவர்கள் படிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இதன் மூலம் கிராமப்புற மாணவர்களும் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியும். ஏற்கனவே, அரசு அறிவித்தபடி தேர்வு எழுதிய சிறப்பாசிரியர்களுக்கான காலிபணியிடங்கள் ஒளிவுமறைவின்றி முறைப்படி வெளிப்படை தன்மையோடு நிரப்பப்படும். மேலும், கூடுதல் காலி பணியிடங்களை நிரப்ப முதல்–அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 1 முதல் 8–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகளுக்கான சீருடைகள் மாற்றியமைக்கப்படும்.

சென்னையில் உள்ள அண்ணா நூலகத்தில் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் மாணவ–மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படும். இதில் மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உடனுக்குடன் சந்தேகத்தை நிவர்த்தி செய்வார்கள்.இவ்வாறு அவர் கூறினார்

19 comments:

  1. ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் TET க்கு பணி நியமனம் நடைபெற்றிருக்கும் ஏதாவது ஒரு முறையில்.இவர்களின் நகர்வு பணி வழங்க கூடாது என்பதனை நோக்கியே உள்ளது.இவர்கள் இருக்கும் வரை பணி நியமனம் என்பது கானல் நீரே...

    ReplyDelete
    Replies
    1. she is goddess for young talented people..not for beggars

      Delete
  2. Pg trb exam pathi enna news irukku frds..( next yr nnu solranga..???)

    ReplyDelete
  3. Tet 2017 velipadaia posting podunga sir

    ReplyDelete
  4. Tet 2017 velipadaia posting podunga sir

    ReplyDelete

  5. M.P.C PG TRB COACHING CENTER FOR MATHEMATICS – ERODE
    * New batch starts from August 12th Sunday
    * Class timing Sunday 10.00 A.M to 5.00 P.M
    * 5 Months course, last batch in M.P.C before PG TRB 2018-
    2019
    * For details: 9042071667

    ReplyDelete
  6. when you give the job to tet passed canditates

    ReplyDelete
  7. 100 தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகள் பட்டியல் இன்னும் வெளிப்படையாக வெளிடப்படவில்லை ஏன்

    ReplyDelete
  8. Hm velipadya nadathuvom,,but new (Sgt,,,bt,,pg,,) post maraimugama nadathvom.money athigam......

    ReplyDelete
  9. enga amma irunthal unaku intha post kidaicrukuma....sethupoirupada

    ReplyDelete
  10. Hm post vacant aanathai fill panna transfer ku amount 5 lakhs pogurathu ennavam?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி