ஒரு நபர் கமிட்டியின் கால அவகாசம் மேலும் நீட்டிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2018

ஒரு நபர் கமிட்டியின் கால அவகாசம் மேலும் நீட்டிப்பு!

ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக அமைக்கப்பட்ட, ஒரு நபர் கமிட்டி, அறிக்கை தாக்கல் செய்ய, மேலும், மூன்று மாதங்கள் கால அவகாசம் கேட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைய, நிதி செலவினம் துறை செயலர் சித்திக் தலைமையில், பிப்ரவரி மாதம், ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி, தன் பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது.ஆனால், இன்னமும் விசாரணை முடிவடையாததால், அறிக்கை தாக்கல் செய்ய, மேலும் மூன்று மாதங்கள், கால அவகாசம் கேட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் நேற்று, பல்வேறு ஆசிரியர் அமைப்புகளின் நிர்வாகிகள், ஒரு நபர் கமிட்டி தலைவர், சித்திக்கை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.

5 comments:

  1. Ipdie thana ella visaranai anayamu panranga

    ReplyDelete
  2. எதிர்பார்த்த ஒன்று. அதிர்ச்சி அடைய ஒன்றுமில்லை.

    ReplyDelete
  3. ஆசிரியர்களுக்கு இன்னும் புரியவில்லையா?

    ReplyDelete
  4. வாய்தா
    வாய்தா
    வாய்தா
    வாய்தா.......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி