பள்ளிகளுக்கு சேவை செய்திட முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2018

பள்ளிகளுக்கு சேவை செய்திட முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு!

பள்ளிகளுக்கு சேவை செய்திட முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

"தமிழகத்திலும், உலகத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள முன்னாள் மாணவர்களும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களும் தங்கள் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும். இவர்களோடு பொதுமக்களும் கரம் கோர்த்து, தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு, சேவை செய்திட வாருங்கள் என்று இருகரம் கூப்பி அழைக்கின்றேன்.

எவ்வளவு தான், அரசு நிதிகளை ஒதுக்கினாலும், 'என் பள்ளி இது' என்ற எண்ணத்தை தன் இதயத்தில் ஏந்திய உங்களைப் போன்ற நல்லோரின் துணை, அனைத்துப் பள்ளிகளையும் மேலும் மெருகூட்டிட வழிவகை செய்திடும். பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணைய வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை தாங்களாக மனமுவந்து செய்ய விரும்பினால், எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமென்று நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கல்வி ஒன்றால் தான் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட முடியும். எனவே, அன்பு உள்ளமும் தர்மசிந்தனையும் கொண்ட அனைவரும் தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று அன்போடு அழைக்கின்றேன்.

அரசின் பணியோடு, தங்களின் பங்களிப்பும் இணையும்போது தான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும், வளம் பெறும். எனவே, அனைவரும் வாருங்கள் ஒன்று சேர்ந்து வளமிகு அரசுப் பள்ளிகளுக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

9 comments:

  1. Appo ne eathuku unaku antha pathavi eathuku...poya

    ReplyDelete
  2. Great.edu.minister kita news channel reporters .enna mathiri tet ealuthi .pass aghi .aduthu next level exam sylabus theriyama .vealaikum poga mudiya exam portion enna nu theriyama .thinam thinam sagarathuku mudiyu eappothan varumo .ithu sambatha question thealiva kealunga (itula india vilaiyae sirantha education systemam

    ReplyDelete
  3. Please help me sir.Enoda paper 2 certificate Page open ahala atharkana solution solunga.

    ReplyDelete
  4. படித்து முடித்து 18 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு அரசு வேலை தரவில்லை. எங்களுக்கு வேலை தாருங்கள் நாங்கள் பள்ளிகளுக்கு உதவுகிறோம்.

    ReplyDelete
  5. yen ungalala uthava mudiyatha..?

    ReplyDelete
  6. Dai mangusa mandaiya pallikudam Padam pathiya

    ReplyDelete
  7. sir, old student means higher level economic wise

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி