இனி வினாத்தாள், 'அவுட்' ஆகாது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2018

இனி வினாத்தாள், 'அவுட்' ஆகாது

இந்தாண்டு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியானதால், சர்ச்சையில் சிக்கிய, சி.பி.எஸ்.இ., வருங்காலத்தில் இதுபோன்ற தவறு நிகழாமல் தடுக்கும் வகையில், 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்துடன்கைகோர்த்துள்ளது.
வினாத்தாள்,அவுட்,ஆகாது,சி.பி.எஸ்.இ.,மைக்ரோசாப்ட்,உதவிசி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம், இந்தாண்டு நடத்திய, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியானதால்சர்ச்சை எழுந்தது. இதனால், சி.பி.எஸ்.இ.,க்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.இந்நிலையில், வருங்காலத்தில், வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க திட்டமிட்ட, சி.பி.எஸ்.இ., அமெரிக்காவை ச் சேர்ந்த, தகவல் தொடர்பு துறை ஜாம்பவான் நிறுவனம், மைக்ரோசாப்டுடன் கைகோர்த்துள்ளது.

இரு நிறுவனங்களும் செய்துள்ள ஒப்பந்தப்படி, சி.பி.எஸ்.இ.,யின் டிஜிட்டல் கேள்வித்தாள்கள், வெளியாகாத வகையில், அதீத பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த தொழில்நுட்ப தீர்வை, மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும்.இதுகுறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய பிரிவு மேலாண்மை இயக்குனர், அனில் பன்சாலி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. சி.பி.எஸ்.இ., நடத்தும் தேர்வுகளின்போது, டிஜிட்டல் முறையிலான கேள்வித் தாள்கள், தேர்வு துவங்குவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன் வரை,பார்க்க முடியாத வகையில், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக உருவாக்கப்படும்.

அதற்கென, பிரத்யேக தொழில் நுட்பத்தை மைக்ரோசாப்ட் உருவாக்கி உள்ளது. புதிய தொழில் நுட்பத்தில் தயாராகும் வினாத்தாள்கள், சிறப்பு குறியீடு உடையவை. எனவே, எந்த சமயத்தில் தவறு நிகழ்ந்தாலும், எளிதில் கண்டுபிடிக்க முடியும். இந்த தொழில் நுட்பம் தொடர்பாக நடந்துள்ள அனைத்துசோதனைகளும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி