கல்வித்துறையில் இருள் - உதயச்சந்திரன் கல்வித்துறையில் மீண்டும் உதிப்பாரா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2018

கல்வித்துறையில் இருள் - உதயச்சந்திரன் கல்வித்துறையில் மீண்டும் உதிப்பாரா?

கல்வித்துறையில் மாபெரும் மாற்றத்தை கொண்டுவந்த
உதயச்சந்திரன் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார்.

உதயச்சந்திரன் ஒரு சாதாரண கல்வி அதிகாரி கிடையாது. தமிழ் இலக்கியத்தின் மீது தனி காதல் உடையவர். பள்ளி கல்வி மீது அளவு கடந்த அக்கறையும் ஆர்வமும் நிறைந்தவர். அதனால்தான் அவர் தமிழக பள்ளிக்கல்வி செயலாளராக நியமித்தபோதுகூட சாமான்ய மக்களும் சந்தோஷப்பட்டார்கள்.
ஒளிர்ந்த அண்ணா நூற்றாண்டு
அவர் பணியில் அமர்ந்தவுடன் பள்ளிக்கல்விதுறை செப்பனிடப்பட்டு, சீரமைக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு, பிரகாசமாக மிளிரும் என எதிர்பார்ப்பு மேலோங்கி எழுந்தது. அதற்கேற்றாற்போல், ஆள், அரவம் இல்லாமல், இருண்டுபோய் கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ஒளி ஊட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் உதயச்சந்திரன்.
அன்பை வாரிகொண்டார்
காலங்காலமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும், மதிப்பெண்கள்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் ஒன்று என்ற மாயையைம் உடைத்தெறிந்தார். புதிய புதிய அணுகுமுறைகள், வழிமுறைகள், எளிய நடை உரைநடைகளை உதயச்சந்திரன் பாடத்திட்டத்தில் புகுத்தினார். இதனால் அரசியல் பேதமின்றி ஒட்டுமொத்த தமிழக தலைவர்கள், பெரியவர்கள், குழந்தைகளின் ஆதரவையும் அன்பையும் வாரிக்கொண்டார்.

வெளிப்படைத்தன்மை

ஆனால் நல்லது என்று நடந்தால் அதை தாங்கி கொள்ள முடியாத நலம் விரும்பிகள் புராண காலத்திலிருந்தே உண்டு. அப்படி இருக்கும்போது உதயச்சந்திரனுக்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் வராதா என்ன? சிலருக்கு உதயச்சந்திரனின் செயல்பாடுகள் எரிச்சலை தந்தன. வெளிப்படைத்தன்மை நடவடிக்கைகள் சிலருக்கு ஆத்திரத்தை மூட்டின.

நீதிமன்றத்தில் வழக்கு

அதனால் எந்நேரமும் இடமாற்றம், பணி மாற்றம் செய்யப்படலாம் என்ற கருத்தும் ஆழமாக வேரூன்றியே நிலவியது. அதற்கேற்றாற்போல் நீதிமன்றத்திலும் இது சம்பந்தமாக வழக்கு நடைபெற்றும் வந்தது. ஒத்திவைப்பு, விசாரணை என சம்பிரதாயங்களும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டுதான் இருந்தன.

தண்டனையா? பரிசா?

கடைசியில் ஜனநாயக மாண்பு நிறைந்த பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டு விட்டார். இதற்கான உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்துவிட்டது. இடமாற்றம் செய்திருப்பது, கல்வித்துறையில் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வந்ததற்கு உதயசந்திரனுக்கு கிடைத்த மோசமான தண்டனையா? அல்லது அவர் செய்த சீர்திருத்தத்திற்கு கிடைத்த பரிசா? தெரியவில்லை!

உதயச்சந்திரன் கல்வித்துறையில் மீண்டும் உதிப்பாரா?ஒளி கொடுப்பாரா?

அனைவரது எதிர்பார்ப்பும் அதுவே!!!

8 comments:

  1. Oru transfer counselling olunga nadatha mudiyala ellaam ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum

    ReplyDelete
  2. Real hero Mr. Udayachandren big solute sir

    ReplyDelete
  3. Royal salute to our Greatest Hero

    ReplyDelete
  4. பெயருக்கு ஏற்ற மாமனிதர்....

    ReplyDelete
  5. பள்ளிக்கல்வித்துறையில் உதயச்சந்திரன் அவர்களை மாற்றியதற்கான காரணம் என்ன?. ..

    மேல்நிலை கல்வியில் பாடப்புத்தகங்கள் முழுமையாக பூர்த்தி அடையாமலேயே உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் உதயச்சந்திரன் அவர்களை மாற்றியது பெரும் சர்ச்சையாக உள்ளது .அவர் இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு ஏற்ற முறையில் மிக மிக எளிமையாக, நன்றாக மாற்றி அமைத்துள்ளார். இந்நிலையில் பாடப்புத்தகம் முழுமையாக பூர்த்தி அடையாத நிலையில் உதயச்சந்திரன் அவர்களை மாற்றியமைத்தால் மேலும் இப் பாடப்புத்தகம் எப்படி பூர்த்தி அடையும் என்று ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தையும், கேள்விக்குறியாகவும் ஏற்ப்படுத்தியுள்ளது. எனவே எதிர்காலம் மாணவர் நலன் கருதி உதயச்சந்திரன் அவர்களை பள்ளிக்கல்வித்துறையை மேலும் நீட்டிக்கும்படி ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவரின் மீது எந்த குறைபாடும் கிடையாது, ஆசிரியர்கள் நலனில் மிகுந்த அக்கறையுடன், நேர்மையுடன் செயல்பட்டு இருப்பது ஒரு குறைபாடா?? இவருடைய குறைபாட்டை எடுத்துச் சொல்லி மாற்றினால் அது எங்களுக்கு மனநிறைவைத் தரும். எந்த குறையும் இல்லாமல் இவரை மாற்றுவது இந்த அரசு பெரும் பெரிய தவறு. இவரை மாற்றினால் இந்த அரசையே மாற்ற வேண்டும்..

    ReplyDelete
  6. The education sector has started wiping out

    ReplyDelete
  7. பள்ளிக்கல்வித்துறையில் உதயச்சந்திரன் அவர்களை மாற்றியதற்கான காரணம் என்ன?. ..

    மேல்நிலை கல்வியில் பாடப்புத்தகங்கள் முழுமையாக பூர்த்தி அடையாமலேயே உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் உதயச்சந்திரன் அவர்களை மாற்றியது பெரும் சர்ச்சையாக உள்ளது .அவர் இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு ஏற்ற முறையில் மிக மிக எளிமையாக, நன்றாக மாற்றி அமைத்துள்ளார். இந்நிலையில் பாடப்புத்தகம் முழுமையாக பூர்த்தி அடையாத நிலையில் உதயச்சந்திரன் அவர்களை மாற்றியமைத்தால் மேலும் இப் பாடப்புத்தகம் எப்படி பூர்த்தி அடையும் என்று ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தையும், கேள்விக்குறியாகவும் ஏற்ப்படுத்தியுள்ளது. எனவே எதிர்காலம் மாணவர் நலன் கருதி உதயச்சந்திரன் அவர்களை பள்ளிக்கல்வித்துறையை மேலும் நீட்டிக்கும்படி ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவரின் மீது எந்த குறைபாடும் கிடையாது, ஆசிரியர்கள் நலனில் மிகுந்த அக்கறையுடன், நேர்மையுடன் செயல்பட்டு இருப்பது ஒரு குறைபாடா?? இவருடைய குறைபாட்டை எடுத்துச் சொல்லி மாற்றினால் அது எங்களுக்கு மனநிறைவைத் தரும். எந்த குறையும் இல்லாமல் இவரை மாற்றுவது இந்த அரசு பெரும் பெரிய தவறு. இவரை மாற்றினால் இந்த அரசையே மாற்ற வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. Yes Manikandan sir ,I agree with u.Why the TN Govt doing like this?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி