கருணாநிதி காலமானார்: நாளை அரசு விடுமுறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2018

கருணாநிதி காலமானார்: நாளை அரசு விடுமுறை அறிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதி காலமானார். ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்றும் நாளை அரசு விடுமுறை என்று தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி கடந்த 11 நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டை உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து வயது மூப்பின் காரணமாக அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் இன்று மாலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். கருணாநிதி மறைவுக்கு ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இதையடுத்து தமிழகத்தில் நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று புதுச்சேரியிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரைக் கம்பத்தில் திமுக கொடி: கருணாநிதியின் வீட்டில் அரைக் கம்பத்தில் திமுக கொடிகள் பறக்கின்றன.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி