TRB - சிறப்பாசிரியர் சான்றிதழ் பிரச்னை : இன்று சரிபார்ப்பு நடக்குமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2018

TRB - சிறப்பாசிரியர் சான்றிதழ் பிரச்னை : இன்று சரிபார்ப்பு நடக்குமா?

சிறப்பு ஆசிரியர் பதவிக் கான தேர்வில், சான்றிதழ் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், இன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடக்குமா என, தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், தையல், மற்றும் இசை பாடப்பிரிவுகளுக்கு, 1,325 சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியமான,டி.ஆர்.பி., வாயிலாக, 2017 செப்., 23ல் போட்டி தேர்வு நடந்தது. இதில், 36 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களுக்கான, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், சிறப்பு ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வைத்திருப்போர், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை, டி.ஆர்.பி.,யிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், சிறப்பு ஆசிரி யர்களுக்கான தேர்வை நடத்தும், தேர்வுத்துறையோ, தமிழ்வழி சான்றிதழ் வழங்குவதில்லை என, அறிவித்துள்ளதால், தேர்வர்கள் தாங்கள் படித்த பள்ளியில், தமிழ் வழி சான்றிதழ் பெற முற்பட்டனர்; அதுவும் முடியவில்லை.மேலும், அரசு தேர்வுத்துறை மட்டுமே, தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சியை நடத்தியது. ஆனால், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் சார்பிலும், இந்த பயிற்சி நடத்தப்பட்டதாக கூறி, சிலர் சான்றிதழ் வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், புகார் எழுந்து உள்ளது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்டோர், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் மற்றும் டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் மனு அளித்துஉள்ளனர். உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அறிவித்தபடி சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நடக்குமா; தள்ளி வைக்கப்படுமா என, தேர்வர்களிடையே குழப்பம் ஏற்பட்டுஉள்ளது.'வழக்கு உள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பை மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்' என, கலை ஆசிரியர் நல சங்கம் கோரிக்கை விடுத்துஉள்ளது.

10 comments:

  1. தயவுசெய்து யாரையும் குழப்ப வேண்டாம்.......குழம்பவும் வேண்டாம்......

    ReplyDelete
  2. All candidates please go to CV verification for Trb special teachers post... Don't confusion... All the friends

    ReplyDelete
  3. With out training higher grade is eligible for teachers post

    ReplyDelete
  4. Aided schools posting pet irnthal soluga frinds

    ReplyDelete
  5. CV verification is today completed...

    ReplyDelete
  6. BT maths, history NO TET.place Theni,9578048717

    ReplyDelete
  7. S Cyrus,mam history kku vacant ellaiya nañum theni than sir

    ReplyDelete
  8. Trb சரியான முறையில் செயல் படுகிறது. மேலும் பல அடுக் கடுக்கான ஆதாரமற்ற தகவல்களை தேர்வில் தேர்ச்சி பெறரதவர்களிடம் சொல்லி அவர்களிடமிருந்து தலா ஒரு ஆயிரம் ரூபாய்க்கு மேல் நூற்றுக் கணக்கான மதிப்பெண் பெறாத தேவர்களின் பணம் சம்பாதிக்க ஒரு கும்பல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிக்கை விட்டுக்குந்துள்ளது. ஆகவே இதனை அறிந்து இது போன்ற மனிதர்கள் யார் என்று அவர் களை உலவுத்துறை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும்.அவர்கள் எந்த நலச்சங்கதின் தலைவராக இருந்தாலும் சரியே. இந்த களாத்தில் பொது நலத்திற்காக யாரும் பாடுபடுபவர்கள் யாரும் கிடையாது.அறிக்கை விது எல்லாம் சுயநலம் மட்டும் தான். ஆகவே இதனை அறிந்து எந்த நல சங்கமும் படித்தவர்களுக்கு தேவை இல்லை

    ReplyDelete
  9. குழப்பம் செய்யும் கூட்டம் ஒருபுறம் கொந்தளிக்கும் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் சிறப்பாசிரியர்கள் ஒரு புறம் இதற்கிடையில் தேர்ச்சி பெற தவரியவர் கலிடம் ஆதாயம் பெற வேண்டும் என்று தானே தலைவன் என்று தலை தூக்கி கொண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பததிரிக்கை செய்தியில் ஹீரோவாக வலம் வந்து குண்டிருப்பவர்கள் உணர வேண்டும்

    ReplyDelete
  10. அனைத்து தகுதிகளும் பெற்றிந்தும் கிட்ட தட்ட 25 ஆண்டுகள் கழித்து தேர்வு எழு தி மதிப்பெண் பெற்ற பிறகு இப்படி வேண்டுமென்றே குழப்பம் என்று போட்டி தேர்வெழுதி மதிப்பெண் பெறாத தேவர்கலிடம் ஆதாயம் அடைய நிநைப்பது ஒரு நல சங்கத்திற்கு அழகா சற்றே சிந்தி க்காமாட்டர்களா.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி