தொடக்க பள்ளி கல்விக்கு வருகிறது ஆபத்து! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2018

தொடக்க பள்ளி கல்விக்கு வருகிறது ஆபத்து!


மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தொடக்க, மற்றும் நடுநிலை பள்ளிகளில்பயிலும் மாணவர்களை தேர்வில் பெயில் செய்ய முடியாது.

ஆனால், கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மேல்நிலை கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்கவும் இந்த ஷரத்தை நீக்க தற்போது மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் மத்திய அரசு முன்வந்துள்ளது.இந்த சட்டத்திருத்தம் மூலம் மாணவர்களை பெயில் ஆக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல, 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு தேர்வில் தோல்வியடையும் மாணவன்2 மாத பயிற்சி பெற்று உடனடி தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இச்சட்டத்திருத்தம் கொண்டுவந்தாலும், 1ம் வகுப்புமுதல் 8ம் வகுப்பு வரை எக்காரணம் கொண்டும் மாணவர்களை பெயில் ஆக்கக்கூடாது என கல்வி பாதுகாப்புஇயக்கம் வலியுறுத்தி உள்ளது.*இதுதொடர்பாக பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நடராஜ் கூறியதாவது*5 மற்றும் 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை பெயில் ஆக்கும் வகையில் மத்திய அரசின் சட்டத்திருத்தம் உள்ளது. இதை, தமிழக அரசு ஏற்கக்கூடாது. இது பள்ளி மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழி வகுத்துவிடும்.

தற்போது 5 மற்றும் 8ம் வகுப்புகளின் இறுதியில் தேர்வுகள் நடத்தி மாணவரது கற்றல் திறனை காண வழி செய்யும் கல்வி உரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாணவர் தேர்ச்சி பெற தவறினால் இரண்டு மாத தனிப்பயிற்சி கொடுத்து மீண்டும் தேர்வு நடத்தலாம் என்றும், இதன்மூலம் மாணவர்களை தக்கவைப்பது பற்றி முடிவு செய்யலாம் என்றும் மசோதா கூறுகிறது.

இச்சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மற்றும் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

கற்றல் குறையுடைய மாணவர்களை கண்டறிந்து தக்க பயிற்சி கொடுத்து தேர்ச்சி பெற வைப்பது ஆசிரியர்களின் கடமை.இதற்காக மாணவர்களை தோல்வியடைய செய்து தண்டிப்பது தவறான அணுகுமுறை ஆகும்.எனவே, தமிழக மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசு இந்த சட்டத்திருத்தத்தை ஏற்கக்கூடாது.இவ்வாறு நடராஜ் கூறினார்.

4 comments:

  1. கல்வியில் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு செய்த அட்டூழியம், மாணவர்களின் கல்விமுறையில் தரமின்மை, அனைவருக்கும் பாஸ் கொடுப்பதால் பெரும்பாலான தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் எழுத்தறிவு கேள்விகுறி ஆகிறது, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் எழுத படிக்க தெரியாத மாணவர்களுக்கு தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும், அரசு சரிவர தேர்வு முறைகளை பருவ முறைகளில் இருந்து ஒரு வருட கல்வியாக மாற்ற வேண்டும், ஒன்பதாம் வகுப்பு வரை பருவமுறை வைத்துவிட்டு பத்தாம் வகுப்பிலிருந்து ஒருவருட தேர்வுமுறை வைப்பதால் மாணவர்கள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர்,

    ReplyDelete
  2. தனியார் பள்ளியில் மாணவர்கள் யாரையும் பெயில் செய்வது இல்லை
    ஏனென்றால் அங்கு பணம்.

    ReplyDelete
  3. என்றைக்கு எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என சட்டம் வந்ததோ அன்று முதல் தொடக்கக் கல்வியின் தரம் குறையத் தொடங்கியது. இன்று 11 ம் வகுப்பு மாணவனுக்கு எளிய கணக்குகளை கூட தீர்க்கத் தெரிவதில்லை. அவர்களுக்கு நீட் பயிற்சி கொடுத்து என்ன பயன்??

    ReplyDelete
  4. kalvi thuraila egappatta kularupadi, pass percentage kattanaunu than nenakirangale thavira learning improve panna vali panurathe ila

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி