அங்கீகாரம் இல்லாத பயிற்சி மையம் மாணவிக்கு கல்வி கட்டணத்தை தரவேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2018

அங்கீகாரம் இல்லாத பயிற்சி மையம் மாணவிக்கு கல்வி கட்டணத்தை தரவேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மாணவிக்கு கல்வி கட்டணத்தை திரும்பத் தருமாறு பேஷன் டிசைனிங் பயிற்சி மையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சென்னை உயர் நீதிமன்றத்தில் தெய்வயானை பழனியப்பன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:எனது மகள் மகாலட்சுமி பேஷன் டிசைனிங் படிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தாள். இதையடுத்து, கடந்த 2016ல் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள காலனி டிசைன் மற்றும் மேம்பாடு மையத்தில் 5 ஆண்டு படிப்பிற்காக விண்ணப்பித்தோம். இந்த மையம் ராஜஸ்தான் மேவார் பல்கலைக்கழகத்திடம் அங்கீகாரம் பெற்றுள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது. பிளஸ் 2வில் எனது மகள் 1056 மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் சேர்க்கை பட்டியலில் அவள் இடம்பெற்றார். இதையடுத்து, கடந்த மாதம் 4ம் தேதி கவுன்சிலிங் நடந்தது. சேர்க்கை கிடைத்தவுடன் முதல் செமஸ்டருக்கு 1 லட்சத்து 37,500ம் மற்றும் போக்குவரத்து வசதிக்காக 24,500ம் வசூலித்தார்கள்.  பயிற்சி மையத்தில் சேர்ந்தவுடன்தான் அந்த பயிற்சி மையம் எந்த பல்கலைக்கழகத்திடமும் அங்கீகாரம் பெறவில்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மையம் மேவார் பல்கலைக்கழகத்திடம் அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பது குறித்த தகவலைப்பெற மத்திய அரசுக்கும், பல்கலைக்கழக மானியக்குழுவுக்கும் கடிதம் எழுதினேன். இதையடுத்து, பயிற்சி ைமயம் தவறான தகவலைத் தந்துள்ளது என்றும் அந்த மையத்தில் தரப்படும் சான்றிதழ் தகுதியானதல்ல என்றும் தெரியவந்தது. இதையடுத்து, பயிற்சியை பாதியில் நிறுத்திவிட்டு, எனது மகளுக்கு செலுத்திய கல்விக் கட்டணத்தை திரும்பத் தருமாறு கோரி அந்த பயிற்சி மையத்திற்கு கடிதம் எழுதினோம். எனது மகளுக்கு 10 ஆயிரம் மட்டுமே தரமுடியும் என்று பயிற்சி மையம் தெரிவித்தது. எனவே, எனது மகளின் படிப்புக்காக கொடுத்த கட்டணத்தை திரும்பத்தருமாறு பயிற்சி மையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் ஆஜரான வக்கீல், இந்த மையம் மேவார் பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். ஒருவேளை மனுதாரரின் மகள் படிப்பை முடித்துவிட்டு அதன்பிறகு அவர் சிரமத்திற்கு உள்ளாகக்கூடாது என்பதற்காகத்தான் அவர் முன்னெச்சரிக்கையாக தனது மகளின் படிப்பை நிறுத்தியுள்ளார். எனவே, மனுதாரரின் மகளுக்கு அவர் செலுத்திய கல்விக் கட்டணம் 1 லட்சத்து 62 ஆயிரத்தை 45 நாட்களுக்குள் பயிற்சி நிறுவனம் தரவேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி