CBSE - 10, 12ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2018

CBSE - 10, 12ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் ?

வருகிற 2020ம் ஆண்டு முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வர சி.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ளது.
மாணவர்கள் பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்து பதில் எழுதுவதை தவிர்க்கவும், அவர்களின் பகுத்தாய்வு திறனை சோதிக்கும் வகையிலும் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலான கேள்விகளும், 1 முதல் 5 மதிப்பிலான கேள்விகள் மட்டுமே அதிகம் கேட்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைந்த எணிக்கையிலானா மாணவர்கள் படிக்கும் தொழில் முறை பாடங்களுக்கு பிப்ரவரி மாதமே தேர்வு நடத்தவும், மேலும் மற்ற முக்கிய பாடங்களுக்கு மார்ச் மாதம் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், தேர்வுத் தாள்களை திருத்தி மதிப்பிட கூடுதல் அவகாசம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம், முன்கூட்டியே தேர்வு முடிவுகளை வெளியிடமுடியும் எனவும் கூறுகின்றனர். இந்த பரிந்துரைகள் மீது ஆலோசனை நடத்தப்பட்ட பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி