Jio Phone 2: இன்று முதல் விற்பனைக்கு வருகிறது! ஜியோ போன் 2 எவ்வாறு வாங்குவது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2018

Jio Phone 2: இன்று முதல் விற்பனைக்கு வருகிறது! ஜியோ போன் 2 எவ்வாறு வாங்குவது?

ஜியோ போன் 2 இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.


தொலைத்தொடர்பு நிறுவனங்களில் அதிவேக வளர்ச்சியை ஜியோ பெற்றுள்ளது. இது ஜியோ போன் 2 என்ற பெயரில் பட்ஜெட் போன் ஒன்றை விற்பனைக்கு கொண்டு வருகிறது. இன்று நண்பகல் 12 மணிக்கு பிளாஷ் சேல் முறையில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வரவுள்ளதால், விரைவாக முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது.
இதில் குவர்டி(QWERTY) கீ போர்டு, கை ஓஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முந்தைய ஜியோ போனை விட, புதிய ஜியோ போன் 2 இருமடங்கு விலை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஜியோ போன் 2 பிளாஷ் சேலில் முன்பதிவு செய்வோர், அடுத்த 5 - 7 நாட்களில் போனைப் பெறலாம். மேலும் அருகிலுள்ள ஜியோ போன் டீலர்கள் மூலமும் வாங்கலாம்.

இந்தியாவில் ஜியோ போன் 2 விலை:
ஜியோ போன் 2வின் விலை ரூ.2,999 ஆகும். முதல் போன் விற்பனையில் கூறப்பட்டது போல், தற்போது பணத்தை திரும்ப பெறும் வசதி இதில் இல்லை. இதனை jio.com என்ற இணையதளம் மூலம் வாங்கலாம்.

ஜியோ போன் 2 வாங்க விரும்புபவர்கள், இன்று நண்பகல் 12 மணிக்கு ஒரு சில நிமிடங்கள் முன்பாக இணையதளத்தை திறந்து, அதனை ரீ-பெரஷ் செய்து கொண்டிருக்கவும். ஜியோ போன் 2க்கான ரீ-சார்ஜ் பேக்குகள் ரூ.49, ரூ.99, ரூ.153 என அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஜியோ போன் 2 சிறப்பம்சங்கள், வசதிகள்:

இரண்டு நானோ சிம்கள் போடும் வகையில், கை ஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படுகிறது. இதில் 2.4 இஞ்ச் QVGA டிஸ்பிளே, 512 எம்பி ரேம், 4 ஜிபி உள்ளடக்க மெமரி, மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி உள்ளது. இந்த போனில் 2 மெகா பிக்சல் பின்பக்க கேமரா, விஜிஏ செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம் 4ஜி வோல்ட், வோ வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்.எஃப்.சி, எஃப். எம் ரேடியோவை இணைத்துக் கொள்ளலாம். கூகுள் அசிஸ்டெண்ட் செயல்படுத்த பிரத்யேக வாய்ஸ் கமெண்ட் பட்டன் காணப்படுகிறது. இந்தப் போன் 2000 mAh பேட்டரி வசதி உள்ளது.

பிளாக்பெர்ரி போனைப் போல, 4 பக்க திருப்புதல் வசதி இதில் இடம்பெற்றுள்ளது. முதல் ஜியோ போனை விட, வடிவமைப்பில் பெரிய மாற்றம் கண்டுள்ளது. டிஸ்பிளே மிகப்பெரிதாக இருக்கிறது. 

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி