NCERT - 6ம் வகுப்பு முதல் யோகா! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2018

NCERT - 6ம் வகுப்பு முதல் யோகா!

பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், யோகா பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும்' என, என்.சி.இ.ஆர்.டி.,எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கூறியுள்ளது.
டில்லியில், என்.சி.இ.ஆர்.டி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளி பாடத்திட்டத்தில், உடற்கல்வி, விளையாட்டு, யோகா ஆகியவை கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என, என்.சி.இ. ஆர்.டி., தெரிவித்துள்ளது.ஆறாம்வகுப்பிலிருந்து மாணவ - மாணவியருக்கு, யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது; யோகா பயிற்சியுடன், அதன் பயன்களையும், மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., மாநில, யூனியன் பிரதேசங்களின், பள்ளி கல்வித்துறைகளுக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன.இந்த பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என, மாநில அரசின் பள்ளி கல்வித்துறையை கட்டாயப்படுத்த முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி